முரசொலி பவளவிழா - வருகை புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்...!!

 
Published : Aug 12, 2017, 03:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
முரசொலி பவளவிழா - வருகை புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்...!!

சுருக்கம்

stalin thanks to the participants of murasoli

முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமது நன்றியினை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகையின் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  

இந்த விழாவை முன்னிட்டு நேற்று முந்தினம் காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. 

இதையடுத்து இரண்டாவது நாளாக நந்தனத்தில் முரசொலி பவள விழா நடைபெற்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் முரசொலி பவளவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து மழையால் தடைபட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமது நன்றியினை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!