பத்திரிகை ’- தொலைக்காட்சியோடு ஸ்டாலின் கூட்டணி! கருத்து கணிப்பு ரகசியத்தை போட்டு உடைத்த தினகரன்!

By Selva KathirFirst Published Apr 10, 2019, 11:10 AM IST
Highlights

பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளோடுகூட்டணி வைத்துக் கொண்டு கருத்துக்கணிப்புகளை திமுகவிற்கு சாதகமாக ஸ்டாலின் வெளியிட்டு வருவதாக தினகரன் கூறியிருந்தார்.
 

பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளோடுகூட்டணி வைத்துக் கொண்டு கருத்துக்கணிப்புகளை திமுகவிற்கு சாதகமாக ஸ்டாலின் வெளியிட்டு வருவதாக தினகரன் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழகத்தை பொறுத்தவரை ஒன்றே ஒன்றை தான் கூறின. அதாவது 40 தொகுதிகளில் 30 முதல் 33 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்பது தான். தமிழக அச்சு ஊடகங்கள், காணொளி ஊடகங்கள் என அனைத்து கருத்து கணிப்புகளுமே ஒரே மாதிரியாக இருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மக்களிடம் வேகவேகமா கொண்டு சென்று சேர்த்து வருகின்றன.

இதற்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ஊடகங்களில் உள்ள தொடர்பு தான் காரணம் என்று நேற்றே ஆசியா நெட் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பேசிய டிடிவி தினகரனும் இதே போன்றதொரு கருத்தை கூறியுள்ளார். அவர் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:- திருநாவுக்கரசர் மரத்துக்கு மரம் தாவுவது போன்று இதுவரை 10 கட்சிக்கு தாவி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார் அங்கிருந்து அவர் எந்த கட்சிக்கு செல்வார் என்பது யாருக்கும் தெரியாது

மக்கள் விரோத கூட்டணியாக பாஜக அதிமுக கூட்டணி உள்ளது. மடியில் கனம் உள்ளதால் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். மந்திரவாதிகளை போன்று தங்களது கைகளில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கயிறுகளை கட்டி உள்ளனர். 

ஆர் கே நகரில் மக்கள் வைத்த அடி போன்று இந்த தேர்தலிலும் அதிமுக திமுகவினர் அடிவாங்க தயாராகிவிட்டனர்  மோடிக்கு தலையையும் ராகுலுக்கு காலையும் வைத்து ஆரா மீனை போன்று திமுக செயல்பட்டு வருகிறது

திமுக கூட்டணி மதச்சார்பின்மை கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகிறது ராகுல் காந்திதான் பிரதமர் என்று ஏமாற்றுகிறார்கள். தற்போது புதிதாக திமுக நாங்கள் இந்துக்களின் எதிரி இல்லை என்று கூறுகின்றனர். இது ஏமாற்று வேலை. மதம் ஜாதி பெயரைக் கொண்டு திமுக ஏமாற்றுகிறது. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி என இரண்டு கூட்டணிகளும் தோல்வியடைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறப் போகிறது.

ஸ்டாலின் தூண்டுதலின் பேரில்தான் பல தொலைக்காட்சிகள் கருத்து கணிப்பு என்ற பெயரில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக் கொண்டு கருத்துத் திணிப்பை சொல்லி வருகிறார்கள். 

80 சதவீத இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வெற்றி பெற வைப்பதற்கு வாக்களிப்பதற்கு தயாராக உள்ளனர்
இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!