
சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்ற இன்று உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரவியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர், 21 ஆண்டுகள் கழித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அரசியல் வாதிகளாக இருப்பவர்கள் பொதுவாழ்வில் எவ்வாறு துய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக வந்திருக்கிறது
தீர்ப்பு வந்திருக்கும் இந்த நிலையில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த தண்டனை உறுதி செய்துள்ளது என தெரிவித்தார்.
இதன் பிறகாவது தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண நிலையான ஆட்சி வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.