
சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து முதல்வர் ஓபிஎஸ் இல்லம் சந்தோஷத்தின் உச்சத்திலும், போயஸ் இல்லம் வெறிச்சோடியும் கிடக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து சசிகலா , சுதாகரன் இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைதண்டனை உறுதியானது. இதையடுத்து சசிகலா வசிக்கும் போயஸ் இல்லத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடியது. நேற்றே தண்டனை கிடைக்கலாம் என்று கருதியதால் சசிகலா கூவத்தூர் புறப்பட்டு சென்றார்.
போயஸ் கார்டனில் இளவரசி உள்ளிட்டோர் இருந்தனர். தண்டனை கிடைத்ததை அடுத்து போயஸ் கார்டன் பக்கம் ஒரு ஈ , காக்கை இல்லாமல் வெறிச்சோடி போனது. மறுபுறம் ஓபிஎஸ் இல்லம் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாஅலை முழுதும் தொண்டர்கள் உற்சாகத்துடன் இனிப்புகளை வழங்கியும் , பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.