
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.கட்சிமாறுதல் தடை சட்டத்தின்படி, 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் குறிபிட்டுள்ளார்.தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
குட்கா விவகாரம்
திமுகவிற்கு எடப்பாடி விரித்த வலை
இதற்கு முன்னதாக, எடப்பாடி அரசு திமுக எம்எல்ஏக்கள் மீது குறி வைத்தது. அதாவது சட்டபேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து சென்றது தொடர்பாக ஸ்டாலின் உட்பட 21 எம் எல் ஏக்கள் மீது , உரிமை குழு நோடீஸ் அனுப்பியது. திமுகவின் 21 எம் எல் ஏக்களும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், திமுகவின் மீது எடப்பாடி வைத்த குறி தப்பியது. இதன் காரணமாக அடுத்து என்ன செய்ய முடியும் என தீவிர யோசனை செய்த எடப்பாடி, கடைசியில் உட்கட்சியிலேயே கை வைத்தார். அதனுடைய விளைவு தான், இன்று தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
அவசர ஆலோசனை
இந்நிலையில் நாளை மாலை எம் எல்ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார் ஸ்டாலின்.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார். ஆட்சி கவிழ்க்க நடவட்டிகை எடுப்பாரா? அப்படி எடுத்தால் எந்த விதத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என பல கேள்விகளுக்கு பதில் தேடி வருகிறார் ஸ்டாலின்.
மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக என்ன முடிவு வெளியாகும் என்றும், அதனை எப்படி எதிர் கொள்வது என்பது உட்படபல முக்கய விவாதங்கள் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஸ்டாலின் தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்ன முடிவு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது