அடுத்த டார்கெட் நம்ம ஆளுங்களா இருக்குமோ? வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் செயல் தல!

Asianet News Tamil  
Published : Sep 18, 2017, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
அடுத்த டார்கெட் நம்ம ஆளுங்களா இருக்குமோ? வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் செயல் தல!

சுருக்கம்

Active leader Stalin urges discussion with Advocates

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால்.

இந்நிலையில், சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துவந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது இதேபோல் தகுதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்ற கலக்கம் ஸ்டாலினுக்கும் திமுக மூத்த தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அதுமாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதா? அதுபோன்று தகுதிநீக்க நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? ஒருவேளை அப்படி தகுதிநீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டிவிட்டால் என்ன செய்வது? போன்ற பல்வேறு கோணங்களில் விவாதிப்பதற்காக, திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், திமுக சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மூத்த தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

PREV
click me!

Recommended Stories

அமித் ஷா போட்ட ஸ்கெட்ச்..! கதறும் தலைவர்கள்..! தமிழக பாஜகவில் யாருக்கு சீட்..?
17 வயதிலேயே மலர்ந்த காதல்... பிரியங்கா காந்தி வீட்டில் டும்டும்..!