
ஃ பெரா மாஃபியா டி.டி.வி !!!….மணல் மாஃ பியா ஓபிஎஸ் !!!…..ரெண்டு பேரையும் வறுத்தெடுத்த ஸ்டாலின் !!!
சென்னை ஆ,,கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மருது கணேஸை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அதிமுக வின் இரு அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், டி.டி.வி.தினகரன் ஆகியோர் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்
தற்போது தேர்தல் களத்தில் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் 2 அணியாக பிரிந்து நிற்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க தடைபோட ஓரணியில் நின்றவர்கள் தற்போது . இரண்டு அணிகளாக இங்கு தேர்தலை சந்திக்கிறார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்,.
ஒரு அணி ஃ பெரா மாஃபியா அணியாகவும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி இன்னொரு அணியாகவும் மக்களை ஏமாற்ற இந்த தொகுதியில் வலம் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
நாங்கள் ஜெயலலிதாவை எதிர்த்தோம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் அவருக்கு துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்தது யார் என்பதை, தற்போது அவர்களே இன்று அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சசிகலா அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஒரு ஃ பெரா குற்றவாளி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் போயஸ் கார்டனில் இருந்தது விரட்டி அடிக்கப்பட்டவர். தற்போது அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றப்போவதாக இங்கு சொல்லித் திரிகிறார் என்று ஸ்டாலின் கடுமையாக பேசினார்.
இவர்கள் அம்மாவை திட்டமிட்டு கொன்ற பாவிகளாச்சே என கூறிய ஸ்டாலின் இவர்கள். ஜெயலலிதாவை திட்டமிட்டு கொன்றதாக நாங்கள் கூறவில்லை. அவர்களே கூறிக் கொள்கிறார்கள் என்றார். அதற்கு இந்த ஃ பெரா புகழ் தினகரன் பதில் கூற வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.
அடுத்து ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது விசாரணை வேண்டும் என்று கூறினார். தற்போது இந்த மர்மம் குறித்து 10 சதவீதம்தான் கூறியிருக்கிறேன் என்கிறார். அவரிடம் கேட்கிறேன் மீதி உள்ள 90 சதவீத மர்மத்தை ஓபிஎஸ் வெளியிடாததற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் கன்டெய்னரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் போன கதை ஓபிஎஸ்க்கு தெரியுமா, தெரியாதா?
கரூர் அன்புநாதன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது அவருக்கு தெரியுமா, தெரியாதா?
அவர், மணல் மாபியா, சேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பர். அவரிடம் வாங்கிய பணம் எவ்வளவு தெரியுமா, தெரியாதா?
போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை தாக்கிய செய்தி, அப்பலோ மருத்துவமனையில் நடந்த மர்மம் அவருக்கு தெரியுமா தெரியாதா?
இதை எல்லாம் அவர், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு வெளியிட்டாக வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சென்னை நகர மேயராக நானும், சுப்பிரமணியனும் இருந்தபோது எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றினோம்.
மெட்ரோ ரயில் திட்டத்தை, வட சென்னைக்கு விரிவுபடுத்தினோம். அந்த உரிமையில் உங்களிடம் ஓட்டு கேட்கிறேன்.
இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு சமாளிப்பதற்காக, கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை மீஞ்சூரில் உருவாக்கினோம்.
மக்களுக்கு துரோகம் செய்த, பெரா அணியும், மணல் மாபியா அணியையும் நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். குற்றவாளி பினாமி ஆட்சிக்கு முடிவு கட்ட நீங்கள் உதயசூரியனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசினார்