அண்ணனை நினைத்து மேடையில் கண் கலங்கிய ஸ்டாலின்! தம்பி பேச்சால் மர்ம சிரிப்பில் அழகிரி!

By Vishnu PriyaFirst Published Feb 28, 2019, 1:49 PM IST
Highlights

தேர்தல் நெருங்கும் நிலையில் தனது ஆட்டத்தை துவக்கிவிட்டார் அழகிரி. ‘தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும்.’என்று பழைய ஸ்டைலில் சாபம் விட்டிருப்பதோடு...’எனது ஆதரவு யாருக்கு? என்பதை தேர்தல் அறிவிப்பு முறையாக வந்ததும் சொல்கிறேன்.’ என்று சொந்த கட்சிக்கு எதிராக பிளான்களும் போட துவங்கிவிட்டார். 
 

தேர்தல் நெருங்கும் நிலையில் தனது ஆட்டத்தை துவக்கிவிட்டார் அழகிரி. ‘தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும்.’என்று பழைய ஸ்டைலில் சாபம் விட்டிருப்பதோடு...’எனது ஆதரவு யாருக்கு? என்பதை தேர்தல் அறிவிப்பு முறையாக வந்ததும் சொல்கிறேன்.’ என்று சொந்த கட்சிக்கு எதிராக பிளான்களும் போட துவங்கிவிட்டார். 

அழகிரியின் இந்த அதிரடி மிரட்டலை துவக்கத்தில் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை தான். அதனால் லட்சியம் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால் தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகள் சிலரும், ஸ்டாலினின் குடும்ப அங்கத்தினர்கள் சிலரும் ‘அவரு சாபம் விட்டா பலிச்சுடும். அவரு நாக்கு அப்படி. அதனால ஏதாச்சும் பண்ணி அவர் வாயை தடுக்குறது நல்லது.’ என்று ஸ்டாலினை அலர்ட் செய்திருக்கின்றனர். 

இதன் விளைவாக கட்சியில் இருக்கும் சீனியர்கள் சிலரை அழகிரியிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுப்பலாமா? என்று முதலில் யோசித்தவர், ‘இதை அவமானமா நினைச்சுட்டார்னா சிக்கல் பெருசாகிடும்.’ என்று யோசித்துவிட்டு, சொந்தபந்தங்களில் சில பெரியவர்களை அ-னாவிடம் பேச அனுப்பிவைத்தார். அவர்கள் செய்த சமாதானத்திற்கு....

”என்னை ஏன் மாற சொல்றீங்க, மொதல்ல அந்த கட்சித்தலைவரை (ஸ்டாலின் தான்) மாறச்சொல்லுங்க. இந்த அரசியல்லாம் வேலைக்கு ஆகாது. அந்த கட்சிக்கு (தி.மு.க.வே தான்) தெற்குல ஓரளவு நல்ல செல்வாக்கு இருக்குது. அதை உருவாக்குனது நான் தான். இப்ப நான் நினைச்சால், அந்த செல்வாக்கை அப்படியே உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன். முடிஞ்சா அந்த தலைவரை தடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்.” என்று கொதித்திருக்கிறார். 

இதை அப்படியே ஸ்டாலினின் காதுகளுக்கு பாஸ் செய்துவிட்டார்கள். இந்த மன உளைச்சலுடனே நேற்று கோயமுத்தூரில் நடந்த  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு சென்றிருக்கிறார் ஸ்டாலின். விமானத்திலும், ஹோட்டல் அறையிலும் அழகிரியின் உள் குத்தை பற்றித்தான் பேசியிருக்கிறார் மூத்த நிர்வாகிகளுடன். பிறகு ஒரு முடிவுடன் கிளம்பி கூட்டத்துக்கு சென்றவர் மேடையில்...

“எங்கள் அப்பா தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் கூட தனது பொதுவுடமை சிந்தனையையும், அரசியல் லயிப்பையும் காட்டினார். எனக்கு ரஷ்யாவை சேர்ந்த பெரும் கம்யூனிஸ தலைவர் ஸ்டாலினின் பெயரை சூட்டினார். 

என் அண்ணன் அழகிரி இருக்கிறாரே அவருக்கு பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாக பெயர் சூட்டினார். அண்ணன் மு.க. அழகிரிக்கு இந்த பெயர் அமைந்தது, அந்த வகையில்தான்.” என்று அழகிரியை அண்ணன், அண்ணன் என்று பாசம் பொங்க குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

ஸ்டாலினின் பேச்சை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த அழகிரியின் குடும்பத்தினர் ‘ஏதேது உங்க தம்பி இறங்கி வர்றமாதிரி தெரியுது! ஒருவேளை பயந்துட்டாரா?’ என்று  கிண்டலடித்துள்ளனர். அழகிரியோ மர்மமாக புன்னகைத்துக் கொண்டாராம். ஆனால் தடிமனான அவரது மூக்கு கண்ணாடியை தாண்டி அவர் உணர்ச்சி வசப்பட்டதை குடும்பத்தினர் புரிந்து கொண்டிருக்கின்றனர். 

அதேபோல் கம்யூனிஸ்ட் மேடையில் அண்ணனைப் பற்றி பேசுகையில் ஸ்டாலினின் கண்கள் லேசாக பனித்ததை காம்ரேடுகளால் கவனிக்க முடிந்ததாம். ஹும்! தன்னை விட்டு பிரிந்து சென்ற மாறன் சகோதரர்கள் மீண்டும் வந்து சேர்ந்தபோது ‘கண்கள் பனித்தது! நெஞ்சம் இனித்தது!’ என்றார் கருணாநிதி. 

இப்போது ஸ்டாலினும் அழகிரியும் கூடிய விரைவில் கோபாலபுர இல்லத்தில் சந்தித்து, கண்கள் பனித்துக் கொண்டால் அதில் அரசியல் ஆச்சரியம் ஏதுமில்லை.
 

click me!