ராமதாஸால் அவமானப்பட்டு கூனி குறுகி நிற்கும் அன்புமணி ! பா.ம.கவை பிளக்க உள்ளுக்குள்ளேயே நடக்கும் சதி!

By Vishnu PriyaFirst Published Feb 28, 2019, 1:37 PM IST
Highlights

வைகோ, திருமா போன்றோருக்கு தி.மு.க. கூட்டணியில் என்ன இம்சை ? என்றால் ....’இவ்வளவு இழுப்பு இழுக்கிறாரே ஸ்டாலின்.’ என்பதுதான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஜெட் வேகத்தில் பேசி முடித்து ஏழு பிளஸ் ஒன்று என தொகுதிகளை வாங்கிவிட்ட ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் கூட கடும் பிரச்னைதான். அது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தது அக்கிரமத்தின் உச்சம்! எனும் விமர்சனங்கள்தான். 
 

வைகோ, திருமா போன்றோருக்கு தி.மு.க. கூட்டணியில் என்ன இம்சை ? என்றால் ....’இவ்வளவு இழுப்பு இழுக்கிறாரே ஸ்டாலின்.’ என்பதுதான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஜெட் வேகத்தில் பேசி முடித்து ஏழு பிளஸ் ஒன்று என தொகுதிகளை வாங்கிவிட்ட ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் கூட கடும் பிரச்னைதான். அது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தது அக்கிரமத்தின் உச்சம்! எனும் விமர்சனங்கள்தான். 

வசவுகளை எதிர்கட்சிகள் மட்டுமே செய்தாலும் கூட ராமதாஸ் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார். ஆனால் சொந்த கட்சிக்குள் இருந்து கொண்டு சிலர் ஊதிவிடுவதைதான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் விளைவாகதான் ‘விமர்சனங்களை அலட்சியம் செய்துவிட்டு வெற்றியை நோக்கி பயணியுங்கள்.’ என்று தன் கட்சியினருக்கு ஆறுதல் கட்டளை இட்டுள்ளார். அதேவேளையில், கட்சிக்குள் இருந்து கொண்டு பிரச்னையை உருவாக்குபவர்கள் யார்? என்று அலசலை நடத்தியவருக்கு பெரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதாவது அன்புமணிக்கு இந்த கூட்டணியில் துளியும் விருப்பமில்லை! ராமதாஸின் நச்சரிப்பால்தான் இந்த கூட்டணிக்கு சம்மதித்திருக்கிறார்! கூட்டணி முடிவான அன்று அவரது முகத்தை கவனியுங்கள், அதில் சந்தோஷமே இருக்காது! செய்தியாளர்களிடம் அவமானப்பட்டதும் அப்பாவுக்காகத்தான்! என்று சிலர் பொதுவெளிகளில் கொளுத்திப் போடுவதை தெளிவாக கண்டுபிடித்து, திவங்கிப் போய்விட்டாராம் ராமதாஸ். 

இப்படி பிரச்னையை உருவாக்குபவர்கள் எல்லாருமே, காடுவெட்டி குருவின் மரணத்தில் ராமதாஸின் மீது வருத்தம் கொண்டதோடு, பா.ம.க.வை விட்டு விலகிடாமல் உள்ளே இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்து, கட்சியை அழிக்க முடிவெடுத்துள்ளவர்கள் என்பதையும் ராமதாஸ் கண்டறிந்திருக்கிறார். 

”எடப்பாடியின் அரசு ஊழல் அரசு! என்றும், ஜெயலலிதாவை கைதி, குற்றவாளி! என்றும் திட்டிய நாம் இப்போது அதே எடப்பாடியுடனும், ஜெ., படத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சியுடனும் கைகோர்த்தால் மக்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள். ஊடகம் மற்றும் எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகுவோம். இந்த விமர்சனங்களும், பரப்புரைகளுமே நமது தோல்வியை உறுதிப்படுத்திவிடும். இப்படி அசிங்கப்பட்டு தோற்பதற்கு பதிலாக தி.மு.க.வுடனோ அல்லது தனித்து நின்றோ தேர்தலை எதிர்கொள்வோம். மக்களாய் பார்த்து தரும் முடிவை ஏற்போம்! என்று சின்ன அய்யா எவ்வளவோ சொன்னார். ஆனால் டாக்டர் மறுத்துட்டார். 

அதோட விளைவுதான் இன்னைக்கு இவ்வளவு அசிங்கங்களை இந்த கட்சி சந்திக்குது. பாவம், முழு நிர்வாக திறமையும், அரசியலை வெற்றிகரமா நடத்திச் செல்லும் சாமர்த்தியமும் இருந்தும் கூட அன்புமணியால் எதையும் செய்ய முடியாதது சாபக்கேடு. இந்த கூட்டணியால் தன் மனைவியின் சகோதரரின் உறவை கூட இழந்துட்டார் அன்புமணி.” என்று பேசி, அன்புவை பா.ம.க.வில் இருந்தே பிரித்து, முடிந்தால் அந்த கட்சியை உடைக்கும் அஸைன்மெண்டுகளோடுதான் இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்! என்று ராமதாஸுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாம். 

இந்த காயத்துக்கு என்ன மருந்து கொடுப்பார் டாக்டர்?

click me!