மாவட்டங்களை பிரிப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டீங்களா ? ! எடப்பாடியை அதிர வைத்த ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Aug 27, 2019, 10:59 PM IST
Highlights

தமிழகத்தில்  மாவட்டங்களை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தாரமங்கலத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயம், ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சியை தொடர்ந்து, தற்போது சேலத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. தாரமங்கலம் திமுக அலுவலகத்தில் 7 அடி பீடத்தில், 8 அடி உயரளவில் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 


இன்று மாலை தாரமங்கலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்தார்.  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது தமிழ்நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மக்களை விளம்பரத்துக்காக சந்திக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை. விளம்பரத்துக்காக நீலகிரி மக்களை தாம் சந்தித்ததாக கூறுவது முதலமைச்சருக்கு  அழகல்ல என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாவட்டங்களை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், அதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டீர்களா எனவும் தெரிவித்தார்.

click me!