“தமிழக மக்களின் சிரமத்தை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Nov 27, 2016, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
“தமிழக மக்களின் சிரமத்தை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுருக்கம்

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகள் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்திய பின்னர் பேசிய அவர், 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்பு பணம் வைத்திருப் பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. 80 சதவீத ஏழை மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினையால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

100 ரூபாய் நோட்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திறந்திருக்கிற ஏ.டி.எம்.களிலும் 2 ஆயிரம் நோட்டு தான் வருகிறது. இந்த பணத்தை மாற்றுவதற்கு மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினால் மீதி சில்லரை தருவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது என்றும், மக்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்..

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?