செம்ம கடுப்பான ஸ்டாலின்..! காங்கிரஸ் இப்படி ஒரு சூழ்ச்சமம் செய்கிறதா..?

By thenmozhi gFirst Published Nov 3, 2018, 5:51 PM IST
Highlights

தி.மு.க.வுக்கு இது மிக கடினமான காலம்தான். பி.ஜே.பி., அ.தி.மு.க. என்று மாபெரும் அரசியல் இயக்கங்களை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் கத்துக்குட்டி அரசியல்வாதிகளின் குடைச்சலையும் சமாளித்து ஆக வேண்டிய கட்டாயம்தான் பெரிய சங்கடம்.

தி.மு.க.வுக்கு இது மிக கடினமான காலம்தான். பி.ஜே.பி., அ.தி.மு.க. என்று மாபெரும் அரசியல் இயக்கங்களை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் கத்துக்குட்டி அரசியல்வாதிகளின் குடைச்சலையும் சமாளித்து ஆக வேண்டிய கட்டாயம்தான் பெரிய சங்கடம். இதில் ஸ்டாலினை எதிர்த்தபடி முதலாவதாக நிற்பவர்கள், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும்தான். 

வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லாது அதற்கடுத்த அத்தனை தேர்தல்களிலும் ஒன்றாய் இயங்குவோம்! எனும் முடிவில்தான் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரண்டின் தலைவர்களும் இருந்தனர். ஆனால் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ‘தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது.

 கருணாநிதியிடம் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருந்தது.’ என்று திரும்பத் திரும்ப வத்தி வைத்துக் கொண்டே இருக்கிறார். அத்தோடு இதுவரையில் இரண்டு அல்லது மூன்று முறை ராகுலை டெல்லியில் சந்தித்துவிட்டார் என்றும் தகவல்கள் தடதடக்கின்றன. இதில் முதல் முறை சந்தித்தது மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியானது. 

ஆக கமலின் காங்கிரஸ் பாசமும், அதற்கு காங்கிரஸ் தரும் இடமும் ஸ்டாலினை வெகுவாக முகம் சுளிக்க வைத்துவிட்டது. விளைவு, ஸ்டாலினுக்கு அருகிலிருக்கும் தி.மு.க.வின் பெருந்தலைகள் சிலர் ‘காங்கிரஸ் நம்முடன் இருக்கபோவதில்லை. அவர்கள் வேண்டவும் வேண்டாம்.’ எனும் ரீதியில் பேச துவங்கினர். 

இதைக்கேட்டு அலறிய தமிழக காங்கிரஸின் மாஜி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராகுலுக்கு மெயில் அனுப்பினார். அதில், கமல் எனும் மண் குதிரையை நம்பி எதையும் செய்வது மிகப்பெரிய அரசியல் அவலம்! எனும் ரீதியில் குறிப்பிட்டார். இதையே சிட்டிங் தலைவர் திருநாவுக்கரசரும் குறிப்பிட்டார். 

இதன் பிறகு டெல்லியிலிருந்து வந்த சில தூதுவர்கள் ஸ்டாலினை சந்தித்து சமாதானம் செய்தனர். விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிப்பது வரையில் சென்று நிற்கிறது கூட்டணியின் செயல்பாடு. 

இந்த நிலையில்தான் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அடுத்த பாறாங்கல் விழுந்திருக்கிறது. இம்முறை அது ரஜினிகாந்தின் வடிவத்தில் வந்துள்ளது. அதாவது தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியிருக்கிறார். 

இது காங்கிரஸின் தலைவரான திருநாவுக்கரசர் கவனத்துக்கு தெரிய வர, அவர் அப்படியே டெல்லிக்கு அதை பார்சல் கட்டி அனுப்பிவிட்டார். ’ஏற்கனவே ரஜினிக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் உரசல் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் தியாகராஜன், ரஜினியை சந்தித்தது ஸ்டாலினைத்தான் கோபப்படுத்தும். இது கூட்டணியைப் பாதிக்கும். எனவே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்யுங்கள்.” எனும் ரீதியில் கோரிக்கைகள் போயின. 

சரி, தியாகராஜன் இதை மறுப்பார், மழுப்புவார் என்று எதிர்பார்த்தால்...அவரோ நெற்றியடியாக பேசுகிறார் இப்படி, “ரஜினையை சந்திக்குறதுல என்ன தப்பு இருக்குது? நான் ரெகுலரா அவரை சந்திக்குறேன். சமீபத்துல சந்திச்சப்ப முரசொலி கட்டுரை விவகாரம் தொடர்பா பேசினேன். ப.சிதம்பரம் கூட ரஜினி, காங்கிரஸ் கூட கூட்டணி அமைத்தால் நல்லா இருக்கும்ன்னு சொல்லியிருக்காரே. இப்போதைக்கு கூட்டணி இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணி  மற்றும் ரஜினி கூட்டணி என்றுதான் தமிழகத்தில் அரசியல் சூழல் இருக்கும்.” என்று போட்டுத் தாக்கி இருக்கிறார். 

தியாகராஜனின் விளக்கத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரண்டுமே கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. ரஜினி தங்களுக்கு குடைச்சல் தருகிறார் என்று தெரிந்தும் கூட்டணியில் இருக்கும் ஒரு பேரியக்கத்தின் மாவட்ட தலைவர்…

click me!