
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பேட்டியிடும் தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் முறையே பணத்தைக்காட்டியும், பிணத்தைக் காட்டியும் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார், அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.
ஆர்.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு வரவேற்பு தெரிவித்தார்.
அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள், தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார், வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்திருப்பது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் மீது நடபடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தற்போது தொகுதிக்குள் தினகரன் பணத்தைக் காட்டியும், மதுசூதனன் பிணத்தைக் காட்டியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கொளத்தூர் தொகுதி தனது செல்லப்பிள்ளை என்றால், ஆர்.கே.நகர் தொகுதி வளர்ப்புப் பிள்ளை என்று தெரிவித்தார்.