வாக்கு மாறாத ஸ்டாலின்.. பெட்ரோல் விலை குறைத்து அதிரடி.. நள்ளிரவு முதல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைகிறது.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 2:51 PM IST
Highlights

மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில் திமுக அரசு 2021-2022 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நேரத்தில் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்த நிலையில் தமிழக அரசின் இந்த பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருந்தது

.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், அவர்களின் வலியை புரிந்து கொண்டு, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து பெட்ரோல் மீதான விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். 

மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில் திமுக அரசு 2021-2022 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நேரத்தில் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்த நிலையில் தமிழக அரசின் இந்த பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருந்தது. 

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை குறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இடம்பெறுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தவாரே நிதியமைச்சர் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே அவர்களின் வலியை குறைக்கும் வகையில் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் அளவுக்கு குறைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறிய பிடிஆர். 

முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைப்படி பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும் என அறிவித்தார். இந்த வரி குறைப்பு உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும் மிகப்பெரும் நிவாரணமாக அமையும் என்றார். பெட்ரோல் மீதான 3  ரூபாய் வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1, 160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் 102.49க்கு  பெட்ரோல் விற்கப்பட்டு வரும் நிலையில்  3 ரூபாய் விலை குறைக்கப்படுவதாக தெரிவித்த நிதித்துறை செயலாளர் இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.  தமிழ்நாட்டில் மொத்தம் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள நிலையில்  தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

click me!