சென்னையில் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! எப்போது என தெரியுமா.? முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 13, 2023, 1:16 PM IST
Highlights

வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பங்கேற்போடு பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

முதலமைச்சர் பதிலுரை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த உரைக்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்தார். சமூக நீதி, சம உரிமை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் பெண்ணுரிமை மத நல்லிணக்கம் பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் வீரத்துடனும் விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டுகளில் 655 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சி என 559 அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன் ஒன்று ஏற்பட்டு நான் ஓய்வில் இருந்த காரணத்தால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். அப்படி நேராமல் இருந்திருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்திருப்பேன். 

ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் சாவு..! 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா? - அன்புமணி கேள்வி

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1முதல் 5ம் வகுப்பு வரைவிலான மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறினார். வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 11ஆம் தேதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பங்கேற்பதோடு பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும். மேலும் பள்ளிவாசலுக்கு வழங்கப்படும்   மானியத்தொகை வரும் நிதியாண்டின் முதல் 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதிமுகவை உடைத்து அசிங்கமான தலைவராகிவிட்டார் இபிஎஸ்.! இப்போதும் கட்சி இணைப்புக்கு ஓபிஎஸ் தயார்-புகழேந்தி அதிரடி

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 கொலை வழக்களில் 24 வழக்குகளில் குற்றம் செய்த  33பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும், தகவல் சேகரித்து வருகிறது.

அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மனித வள அதிகாரிகள் மூலம் தகவல்கள் பெறப்படுகிறது. சந்தேகப்படும் நபர்கள் மீது அந்தந்த மாநிலங்களின் காவல்துறை மூலம் தகவல்கள் பெறப்படுகிறது. குற்றச்சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது..! சட்ட மசோதா தாக்கல் செய்து அதிரடி காட்டும் தமிழக அரசு

click me!