அடங்கினாலும் மு.க.அழகிரி மீது தீராத ஆத்திரம்... ஒடுங்கும் வரை துரத்த ஸ்டாலின் எடுத்த பகீர் சபதம்!

By Thiraviaraj RMFirst Published Jan 31, 2019, 3:06 PM IST
Highlights

மதுரையை பொறுத்தவரை எதிர்கட்சிகளை பந்தாடுவது திமுகவின் இரண்டாவது நோக்கம்தான். மு.க.அழகிரியை மொத்தமாக ஓரங்கட்டி அவரது செல்வாக்கை சரிப்பதே திமுக தலைமையின் முதல் நோக்கம் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.
 

மதுரையை பொறுத்தவரை எதிர்கட்சிகளை பந்தாடுவது திமுகவின் இரண்டாவது நோக்கம்தான். மு.க.அழகிரியை மொத்தமாக ஓரங்கட்டி அவரது செல்வாக்கை சரிப்பதே திமுக தலைமையின் முதல் நோக்கம் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக மதுரை தொகுதிகளிகளில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். அழகிரியின் கோட்டை எனச் சொல்வதை தகர்க்க வேண்டும்' என மாவட்ட நிர்வாகிகளுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். 

மக்களவை தேர்தலில் மொத்த தொகுதிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என களத்தில் குதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். குறிப்பாக மதுரை பகுதியை வென்றே தீர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். திமுகவிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி தேர்தல் நேரத்தில் தனது பலத்தைக் காட்ட திமுகவுக்கு எதிராக உள்ளடி வேலைகள்ன் பார்க்கலாம். அல்லது வேறு கட்சிக்கு ஆதரவாக முழு மூச்சில் களமிறங்கலாம். 

அவர் எந்த ரூபத்தில் களத்திற்கு வந்தாலும், செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது. மதுரை அழகிரியின் கோட்டை என்பதை தகர்த்தே ஆக வேண்டும். மீண்டும் அவர் எழுச்சி பெற்றால் பாம்பை அடித்து விட்டு பாதியில் வந்த கதையாகி விடும் என்றெல்லாம் உஅதுரை உடன் பிறப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். அத்தோரு மட்டுமல்லாமல், மக்களவை தேர்தலில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த முயற்சித்து வருகிறார்கள். 
 
மதுரை தொகுதிக்கு வெயிட்டான வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அரசியலில் இருந்து 15ன் ஆண்டுகளுக்கும் மேல் ஒதுங்கி இருந்த முன்னாள் மேயரும், எம்.எல்.ஏவுமான செ.ராமச்சந்திரனை மீண்டும் களத்திற்கு இழுந்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவரோடு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுசாமி, மருத்துவ அணி மாநில துணைத் தலைவர், டாக்டர்.சரவணன் என மூவரில் ஒருவர் மதுரை தொகுதியில் களமிறக்கப்பட உள்ளனர். 

ஒருவேளை செ.ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவரை திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் களமிறக்கவும் திட்டமிட்டு உள்ளனர். காரணம், திருப்பரங்குன்றம் தொகுதியில் இவர் 1996ல் தேர்தலில் வெற்றிபெற்றவர். ஆகையால், வேலுசாமி, அல்லது டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் ரேஸில் உள்ளனர். மதுரையை பொறுத்தவரை எதிர்கட்சிகளை பந்தாடுவது இரண்டாவது நோக்கமே. மு.க.அழகிரியை மொத்தமாக ஓரங்கட்டி அவரது செல்வாக்கை சரிப்பதே திமுக தலைமையின் முதல் நோக்கம் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

click me!