ஓ.பிஎஸ்-க்கு சிக்கல்... திமுகவின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 31, 2019, 1:48 PM IST
Highlights

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கை வரும் 7-ம் தேதியாவது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற திமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

 எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், திமுக வழக்கறிஞர்கள் உச்சநீதிமறத்தில் இது குறித்து முறையிட்டனர்.

வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வரும் 7ம் தேதி யாவது விசாரணைக்கு எடுத்துக் கொல்ல் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 7ம் தேதி ஓ.பி.எஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!