ஸ்டாலின் குடும்பத்துக்கு வைகை அணை அயிரை மீனை சமைத்துக் கொடுத்தவரை ஜெயிலில் போட்ட போலீஸ்: என்னாண்ணே வெவகாரம்?

By Vishnu PriyaFirst Published Sep 27, 2019, 6:06 PM IST
Highlights

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், அவரது குடும்பத்து ஆளுங்களும் மதுரையில வந்து தங்கினால் அவர்களுக்கு , நாக்கு சப்புக்கொட்ட வைக்கும் அயிரை மீன் குழம்பை யதமாய் பதமாய் சமைத்து, தானே கொண்டு போய் கொடுப்பது மதுரை அதலை பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமாரின் வழக்கம். இவர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருக்கிறார். 
 

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், அவரது குடும்பத்து ஆளுங்களும் மதுரையில வந்து தங்கினால் அவர்களுக்கு , நாக்கு சப்புக்கொட்ட வைக்கும் அயிரை மீன் குழம்பை யதமாய் பதமாய் சமைத்து, தானே கொண்டு போய் கொடுப்பது மதுரை அதலை பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமாரின் வழக்கம். இவர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருக்கிறார். 

ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நல்ல பெயரை வாங்கி விட்டதன் விளைவாக ஸ்டாலின் வீட்டில் வேலைபார்க்கவும் தன் பொறுப்பில், தனக்கு தெரிந்த சிலரை அனுப்பியுள்ளாராம் இந்த செந்தில். இப்பேர்ப்பட்ட மாநில நிர்வாகியைத்தான் சமீபத்தில் மதுரை போலீஸ் கைது செய்து சிறையிலடைத்தது. கைதுக்கு காரணம் என்ன? என்று விசாரித்தால்....பாக்கியலட்சுமி எனும் பெண் கொடுத்த புகார்தான் என்கிறார்கள். மதுரை கமிஷன்ர் அலுவலகத்தில் தான் கொடுத்த புகாரில்“பைபாஸ் ரோட்டுல எங்க அப்பாவோட பூர்வீக சொத்து இருக்குது. இதன் தற்போதைய மார்க்கெட் ரேட் பதினஞ்சு கோடி ரூபாய் பெறும். இந்த சொத்துக்களுக்கு வாரிசா இருபத்தஞ்சு பேர் இருக்கோம் (யம்மாடியோவ்). ஆனா இந்த செந்தில்குமாரோ இதுல இருபத்து நாலு பேரோட போட்டோக்களை மாற்றி, போலியாக கையெழுத்தும் போட்டு , முத்திரைத்தாள் மதிப்பையும் குறைத்து மோசடி செஞ்சிருக்கார். இதைக் கண்டிபிடிச்சு நாங்க கேட்டதும் எங்களை மிரட்டினாங்க.” என்று குறிப்பிட்டுள்ளார் பாக்கியலட்சுமி. கமிஷர்  உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிச்சு நடவடிக்கை எடுத்து, செந்தில்குமாரை அரெஸ்ட் பண்ணி உள்ளே தள்ளினார்களாம். 

பாக்கியலெட்சுமியின் புகார் மட்டும் போதாதென்று, தி.மு.க.வின் வட்டச்செயலாளரான பத்திர எழுத்தர் கண்ணனும் ஒரு புகாரை செந்தில் மீது வாசித்துள்ளார் . அதில் “எனது பெயரையும், முத்திரையையும் தவறாக பயன்படுத்தி செந்தில்குமார் மோசடி செய்துள்ளார். நான் கொடுத்த புகாரினால்தான் கேஸ் ரொம்ப ஸ்டிராங்க் ஆச்சு. எங்க கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்துடன் தான் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்  கொண்டே செந்தில்குமார் நிறைய முறைகேடுகளை பண்றார்.” என்று குமுறியிருக்கிறார். 

ஆனால் செந்தில்குமாரின் வழக்கறிஞர் கண்ணனோ “செந்தில்குமார் எந்த முறைகேடும் பண்ணலை. புகாருக்கு உள்ளான இடத்தில் அவர் சார்பில் கிரயம் போட்டு இருந்தோம். அந்த இடத்துக்கு உரிய வாரிசுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அதை கேன்சல் செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். பணப் பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக பக்காவாகதான் நடந்திருக்குது. ஆக எல்லாமே முறையாக பண்ணியும், அந்த ஆவணங்களை போலீஸிடம் காட்டியும் கூட அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இதனால கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம்.” என்கிறார். 

ஆனால் மதுரை அ.தி.மு.க.வினரோ இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவரை ஓவராக உரசிவருகின்றனர். “ஸ்டாலின் குடும்பத்துக்கு வைகை அணை அயிரை மீனை பரிமாறிய கைகள் இன்று கம்பி எண்ணுது.” என்று கிண்டலடிக்கிறார்கள் மதுரையே அதிர. 
ஹும் மீன் சாப்பிட்டது ஒரு குத்தமாய்யா!?

click me!