அப்பாடா... 20 நாட்களுக்குப் பிறகு தமிழ் பேசுகிறேன்...!! சென்னையில் மேதகு தமிழிசை அவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2019, 6:00 PM IST
Highlights

இருபது நாட்களுக்கு பிறகு தமிழ் பேசுகிறேன், பிரதமர் மோடி மக்களுக்காக தொடங்கிய ஆயுஷமான் பவ திட்டம் தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றது. பாரத பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 

வேலிக்கு வெளியே வரும் கிளைகளை வெட்டலாம் ஆனால் பூமிக்கு கீழே உள்ள வேரை வெட்ட முடியாது, தனியார் மருத்துவக்கல்லூரியில் தெலுங்கானா மாநில ஆளுனரும் தமிழக பாரதிய ஜனதா முன்னால் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றியுள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன் மாணவ மாணவிகளுக்கு உரையாற்றினார். அப்போது பேசியதாவது,மேதகு என்று சொல்வதைவிட பாசமிகு சகோதரி என்று என்னை அழைக்கலாம், தமிழ் கற்றதானால் நான் பேசவில்லை என்னை தமிழ் பெற்றாதனால் நான் தமிழை பேசுகிறேன், இருபது நாட்களுக்கு பிறகு தமிழ் பேசுகிறேன், பிரதமர் மோடி மக்களுக்காக தொடங்கிய ஆயுஷமான் பவ திட்டம் தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றது. 
பாரத பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 

இன்றுடன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 46 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.தண்ணீருக்காக நாம் சிரமப்பட்டு இருக்கிறோம்.
மாணவ மாணவிகள் அன்றாட பாடத்தை அன்றே  முடிக்க வேண்டும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படுவதை விட அதனை தாங்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் மாணவ மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் . அன்பு ஒன்று தான் இந்த உலகில் பலமானது, அன்பு இருக்கிற இடத்தில் எதையும் சாதிக்க முடியும்.

குறிக்கோளோடு வாழ்க்கையை தொடங்க வேண்டும், தொடர வேண்டும்; இயற்கையை ரசிக்க வேண்டும் கல்வி பணிவு துணிவு அன்பு இருந்தால் வெற்றியடைய முடியும், சுற்றத்தையம் நம்மையும் தூய்மையாக வைத்துக் கொள்வோம். வேலிக்கு வெளியே வரும் கிளைகளை வெட்டலாம் ஆனால் பூமிக்கு கீழே உள்ள வேரை வெட்ட முடியாது வேரை போன்றது தன்னம்பிக்கை என்றும் கூறினார்.

click me!