திமுக முன்னணி தலைவர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்...!! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2019, 12:20 PM IST
Highlights

கழக மூத்த முன்னோடிகள் மிசாவில் தனது அனுபவத்தையும்,  தளபதி ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட திட்டமிட்டு இருந்தனர், ஆனால்  தலைவர் ஸ்டாலிதான் அதை தடுத்திவிட்டார். இல்லை என்றால் இந்நேரத்திற்கு பதிலடி அறிக்கைகள் பறந்திருக்கும். யாருக்காகவும் எதற்காகவும் சளைத்தவன் அல்ல திமுககாரன்.  தான் அனுபவித்த கொடுமைகள் நாட்டுக்கே தெரியும்... அதற்கு இப்போது விளம்பரம் தேவையில்லை, என ஸ்டாலின்  கூறிவிட்டார் 

தான் மிசாவில் கைதானது குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு தற்போதைக்கு யாரும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு திமுக தலைவர்  ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று, திமுக முன்னாள் அமைச்சர்  பொன்முடியை பேட்டி கொடுத்தார். அப்போது  திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதனது குறித்து சந்தேகம் எழுப்பிய அதன் செய்தியாளர், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை எனக்கூறி ஷா- கமிஷன் அறிக்கையை காண்பித்தார்.

இது தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் அச்சாரத்தையே அசைத்து பாரக்கும் முயற்ச்சி  என திமுக தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர். மிசாவில்  கைதாகி சிறைதண்டனை அனுபவித்துவிட்டு, அரசியலில் அடி எடுத்து வைத்த ஸ்டாலினின் தியாகத்தையே கேலி செய்யும் இந்த முயற்சிக்கு திமுகவில் இருந்து இதுவரை யாரும் தக்க பதலடி கொடுக்கவில்லை என்றும், ஸ்டாலின் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை உடைத்தெரியும்  ஆற்றல் கொண்ட தலைவர்கள் திமுகவில் இல்லையா.? என்றும் உடன் பிறப்புகள் சமூகவலைதளத்தில் புலம்பித் தள்ளிவருகின்றனர்.

 

 

அதில் தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் ஒரு தொண்டர், ஸ்டாலின் அருகில் நின்று போஸ் கொடுக்க பொன்முடியும் , ஜெ. அன்பழகனும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஆனால் ஸ்டாலின் தியாகத்திற்கு பங்கம்வந்துள்ள நிலையில் முன்னணி தலைவர்கள் இதற்காக குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.  பேட்டி கொடுத்த பொன்முடிக்கு பதில் கொடுக்க தெரியவில்லை, ஜெ. அன்பழகனிடம் துடிப்பு இல்லை,  சேகர்பாபு, ஏவா வேலு எல்லாம்  பிசியாக இருக்கிறார்கள்.  இந்த பிரச்சனையை யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்,  தலைவர்  கருணாநிதிக்கு இருந்ததுபோல கோ.சி மணி, வீரபாண்டி ஆறுமுகம், தூத்துக்குடி என்.பெரியசாமி போன்ற தளபதிகள், ஸ்டாலினுக்கு இல்லையா என பொங்கியுள்ளார். ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகளை திமுக தலைமைக்கு நெருக்கத்தில் உள்ளவர்கள் மறுத்துள்ளனர், இது குறித்து தெரிவிக்கும் அவர்கள், 

கழக மூத்த முன்னோடிகள் மிசாவில் தனது அனுபவத்தையும்,  தளபதி ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட திட்டமிட்டு இருந்தனர், ஆனால்  தலைவர் ஸ்டாலிதான் அதை தடுத்திவிட்டார். இல்லை என்றால் இந்நேரத்திற்கு பதிலடி அறிக்கைகள் பறந்திருக்கும். யாருக்காகவும் எதற்காகவும் சளைத்தவன் அல்ல திமுககாரன்.  தான் அனுபவித்த கொடுமைகள் நாட்டுக்கே தெரியும்... அதற்கு இப்போது விளம்பரம் தேவையில்லை, என ஸ்டாலின்  கூறிவிட்டார் என்றனர்.  மேலும் தற்போது நாங்குநேரி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் வேளையில் இந்திராகாந்தியின் மிசா கொடுமைகளை பேசுவது சரியாக இருக்காது என தலைவர் தவிர்த்து விட்டார் என்றார். எதிர் அணியினர் திட்டமிட்டு போடும் தூண்டிலில் தற்போது ஓடிப் போய் சிக்கினால்... இடைத்தேர்தலில் அதுவே பேச்சாகிவிடும்.  பிறகு மத்திய மாநில அரசுகளின் அவலங்களை பேச முடியாது... என்பதால் இந்த அவர் எடுத்துள்ளார் முடிவு எடுத்துள்ளார் என விவரத்தை கூறினர்.

click me!