எடப்பாடிட்ட பேசிட்டேன்... அதிமுக கூட்டணி தான்... கருணாஸ் விடும் புருடா... கைகொட்டி சிரிக்கும் அதிமுக..!

By Selva KathirFirst Published Oct 18, 2019, 10:37 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை கருணாஸ் எப்போது சந்தித்தார் என்கிற தகவலை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது ராமநாதபுரம் அமைச்சராக இருந்த மணிகண்டன் – கருணாஸ் இடையே மோதல் உச்சமாக இருந்தது. மணிகண்டன் அமைச்சராக இருந்த காரணத்தினால் கருணாஸ் தனது சொந்த தொகுதியான திருவாடனைக்குள் நுழையவே முடியாத சூழல் இருந்தது.

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடியிடம் பேசிவிட்டதாகவும் தங்களுக்கு சரியான விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கருணாஸ் கூறியிருப்பதை கேட்டு அதிமுகவினர் கைகொட்டி சிரிக்கின்றனர்.

பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை ஏற்பாடுகளை கருணாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கூட்டணி குறித்து எடப்பாடியிடம் தான் பேசியுள்ளதாவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு உரிய முக்கியத்துவத்துடன் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை கருணாஸ் எப்போது சந்தித்தார் என்கிற தகவலை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது ராமநாதபுரம் அமைச்சராக இருந்த மணிகண்டன் – கருணாஸ் இடையே மோதல் உச்சமாக இருந்தது. மணிகண்டன் அமைச்சராக இருந்த காரணத்தினால் கருணாஸ் தனது சொந்த தொகுதியான திருவாடனைக்குள் நுழையவே முடியாத சூழல் இருந்தது.

மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி அடித்த பிறகு கருணாஸ் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் முதலமைச்சரை சென்று சந்தித்துள்ளார். அப்போது தான் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருணாஸ் பேசியுள்ளார். பேசினார் என்று கூறியதுடன் கோரிக்கை வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதனை எல்லாம் அண்ணன் எடப்பாடியார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

உண்மை இப்படி இருக்க உள்ளாட்சி தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படையை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டதாக கருணாஸ் புருடா விட்டுத் திரிவதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். மேலும் கூவத்தூர் வீடியோ என்று கூறி இவர் எடப்பாடி தரப்பை மிரட்டியதை அவ்வளவு எளிதாக நாங்கள் என்ன மறந்துவிடுவோமா? மேலும் இவரும் தமிமுன் அன்சாரிம் ஸ்டாலினை சென்று சந்தித்தது எடப்பாடிக்கு தெரியாதா? என்றெல்லாம் கூறி சிரிக்கின்றனர்.

click me!