
முதல்வராக இருந்த வரை அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சீறுவது ஏன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் 'போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்தவர்களை ஆதரித்தவர் ஓ பன்னீர் செல்வம். அவர் முதல்வராக பதவி வகித்தவரை ஜெயலலிதாவின் மரணம குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.
தன் பதவிக்கு ஆபத்து வந்தவுடன் ஜெ.சமாதியில் தியான போராட்டம் நடத்திய பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்த திடீர் அரசியல் விசுவாசத்துக்கு என்ன காரணம்?
முதலில் தனக்கு பதவி வழங்கியர்களை மறந்து விட்டு பின்னர் தங்களுக்கு பதவி வழங்கியவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதிமுகவினர் என்றார் ஸ்டாலின்.