
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் திமுகதான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை 'ஜெ. மீது எந்த குற்றமும் கிடையாது. திமுகவினர் அதிமுகவை ஒழிக்க பல்வேறு சதிதிட்டங்களை தீட்டி வருகின்றனர்.
அவர்கள்தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றால் அவர் இறந்துவிடுவார் என்று திட்டமிட்டனர்.
ஜெயலலிதா இறப்புக்கு முழுக்க முழுக்க திமுகவின் சதிதான் காரணம்" என்று தம்பிதுரை தெரிவித்தார்.