
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
ஆளுனருடனான சந்திப்பிற்குப்பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ஸ்டாலின் கூறியதாவது;
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினார்கள். ஏற்கனவே கூவத்தூரில் நடந்த குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் முறையிட்டோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கூவத்தூர் குதிரை பேரம் வீடியோவாக டைம்ஸ் நவ் ஸ்ட்ரிங் ஆபரேஷனில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரவணன் மற்றும் கனகராஜ் தெளிவாக பேட்டியளித்துள்ளார். ஆளும் தகுதியை இழந்த இந்த அரசின் போலித்தனத்தை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அமலாக்க பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பேசினார்.
கடந்த சில நாட்களாக சபையில் இந்த கொடுக்கல் வாயால் விவகாரம் குறித்து பேச சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அனுமதிக்க வில்லை, ஆதாரத்தை கொடுத்து விட்டுதான் பேசவேண்டும் என்றார். ஆதாரத்தை எடுத்து சென்று கொடுத்தோம். ஆனால் அவர் தனியாக சபாநாயகள் அறையில் வந்து கொடுக்கவேண்டும் என்றார். அவர் சொன்னது போலவே அவரது அறையில் எடுத்து சென்று கொடுத்தோம், ஆகவே நாளை நடக்கும் சபையில் பேச அனுமதிப்பரா என்பதை பார்க்கலாம் என்றார்.
திமுக கோரிக்கைகளை சபாநாயகர் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை குதிரை பேரம் நடந்ததை அப்போதே ஆளுநரிடம் முறையிட்டோம் அனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூவத்தூரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக இருந்த வீடியோ ஆதாரத்தை ஆளுநர் நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நாங்கள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
மேலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்துள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி கலந்து பேசி முடிவெடுப்போம் என்றார்.