
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எம்.எல்.ஏ. பணபேர விவகாரம் குறித்து முறையிட்டதாக தெரிகிறது.
எம்.எல்.ஏ. சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து, ஆளுநரிடம் முறையிடப் போவதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்தவுடன், ஆளுநர் மாளிகைக்கு சென்று மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக இன்று காலை அறிவித்திருந்தார்.
வீடியோ விவகாரம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து நேற்றே நேரமில்லாத நேரத்தில் பேச அனுமதி கேட்டாம். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் எங்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இன்றும் சட்டப்பேரவையில் எம்எல்ஏ சரவணனின் வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினாம். ஆனால் இன்றும் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இந்த விவகாரம் குறித்து பேச ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ., சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து முறையிட்டுள்ளார். பணபேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆளும் தகுதியை எடப்பாடி அரசு இழந்து விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டமன்ற துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், மு.க.ஸ்டாலினுடன் சென்றனர்.