முதலமைச்சர் என்ன சீன் போடவா அமெரிக்கா போகிறார் ? கிழத்து தொங்கவிட்ட மு.க.ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Aug 14, 2019, 8:08 AM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நான் சென்று பார்த்தது சீன் போட என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா மற்றும் லண்டன் செல்வதும் சீன் போடவா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மேற்கு மாவட்டம் சார்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்து தி.மு.க சார்பில் முடிந்த அளவிற்கு கேரள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதனை ஏற்று இன்று முதல் கட்டமாக சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக 10 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற நிவாரண பொருட்களை வர இருக்கிறது என தெரிவித்தார்.


முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தகுதிக்கு மீறி விமர்சனம் செய்கிறார். நான் நீலகிரி மாவட்டத்துக்கு  சீன் காட்ட சென்றதாக விமர்சித்திருக்கிறார். லண்டன் போகக்கூடிய முதலமைச்சர் சீன் காட்ட போகிறார் என்று நான் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்.

ஆனால் அவரைப் போல பொறுப்பில் இருந்து பதவியை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக நான் பேசமாட்டேன் என தெரிவித்த ஸ்டாலின், கோவை வரை வந்த முதலமைச்சர் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட  நீலகிரிக்கு செல்லவில்லை எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

click me!