DMK: 3 முக்கிய அமைச்சர்களுக்கு கல்தா…? லகானை கையில் எடுத்த ஸ்டாலின்… மாறும் அமைச்சரவை

By manimegalai aFirst Published Dec 13, 2021, 7:50 PM IST
Highlights

ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அமைச்சரவை மாற்றத்துக்கு ஸ்டாலின் தயாராகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அமைச்சரவை மாற்றத்துக்கு ஸ்டாலின் தயாராகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

10 ஆண்டுகள் கழித்து அரியணை ஏறி உள்ள திமுக அரசு தமிழக மக்கள் பெருத்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். அதற்கேற்ப ஒவ்வொரு காரியத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

முதல்வரின் நடவடிக்கைகள், மக்கள் நல திட்டங்கள் மீது அவர் காட்டும் வேகம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பெரிய அளவில் இம்பாக்ட் கிடைக்கவில்லை என்பதாக கூறப்படுகிறது.

முதலில் மக்கள் பணி அதன் பின்னரே மற்றவை என்பது போல முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அமைச்சர்களுக்கு கறாராக சில இன்ஸ்ட்ரக்ஷனை கொடுத்துள்ளார். ஆனாலும், வழக்கம் போல தமது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் மூத்த அமைச்சர்கள் ஜம்மென்று வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம்.

இது போதாது என்று அமைச்சர்கள் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட்டை பார்த்த ஸ்டாலின் அப்செட்டாகி உள்ளார் என்கின்றனர் அறிவாலய முக்கிய பிரமுகர்கள். துடிப்புடன் செயல்படாமல் துறையை பற்றி இன்னமும் அறிந்து, தெளிந்து இயங்காமல் அமைச்சர்கள் உள்ளனராம்.

அவர்களை பற்றிய ரிப்போர்ட் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையாம். குறிப்பாக தலைமைக்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும் ஒரு அமைச்சரின் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட்டை பார்த்து ஏகத்துக்கும் ஸ்டாலின் அப்செட்டாகி இருக்கிறாராம்.

சென்னைக்கு அருகே முக்கிய பகுதியை சேர்ந்த அமைச்சர் பற்றியும் பெரிய அளவில் நல்ல தகவல்கள் வந்து சேரவில்லையாம். கொங்கு மண்டலத்தில் உள்ள பெண் அமைச்சரும் இன்னமும் தெளிவில்லாமல், சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கிறாராம்.

இவ்வாறு அமைச்சர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் போதிய அளவில் மக்களையும் ஈர்க்காமல், தம்மையும் ஈர்க்காமல் உள்ளதாம். அதேபோன்று உதயநிதிக்கு எப்போது அமைச்சர் பதவி என்று குடும்ப உறுப்பினர்கள் கம்பு சுற்றிக் கொண்டே நெருக்கடி தருவதால் அமைச்சரவை மாற்றம் என்ற லகானை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதாக தலைமை செயலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

அமைச்சரவையில் மாற்றம் என்பதை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் கன்பார்ம் என்று அடித்து சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அப்போது இன்ஆக்டிவ் என்ற வட்டத்துக்குள் இருக்கும் 3 அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் என்றும், உதயநிதிக்கு வளமான துறை ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.

இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இப்போது மாவட்டம், மாவட்டமாக கெத்து காட்ட தொடங்கி உள்ளனராம். முதல்வரின் இந்த அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்தியை அறிந்த சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் படு அப்செட்டில் இருப்பதாக பேசப்படுகிறது.

இன்னும் சொல்ல போனால் யாரும் எதிர்பார்க்காத சில முக்கிய அமைச்சர்கள் இலாகாக்கள் குறைக்கப்பட்டு டம்மியாக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்கின்றனர் அறிவாலயத்தை நன்கு அறிந்தவர்கள்…! கடைசியில் காத்திருந்து… காத்திருந்து அமைச்சரவை மாற்றம் என்ற லகானை கையில் எடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர் அனைத்தும் தெரிந்தவர்கள்..!!

click me!