'அதிர்ச்சியில் இருக்கிறேன்'..! எம்.எல்.ஏ மரணத்தால் கலங்கிய ஸ்டாலின்..!

By Manikandan S R S  |  First Published Feb 27, 2020, 12:15 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கே.பி.பி. சாமியின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார். அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சாமி, மீனவ சமுதாய மக்களுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்று கூறினார். 


திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வாக இருந்து வந்தவர் கே.பி.பி.சாமி. 1962ம் ஆண்டு பிறந்த இவர் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். திமுகவின் மாநில மீனவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சாமி 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சாமி, 2016ல் மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கே.வி.கே குப்பத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். கே.பி.பி. சாமி காலமான செய்தி அறிந்ததும் ஏராளமான திமுகவினர் காலையில் இருந்து குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் சட்டமன்ற உறுப்பினர் சாமியின் உடலுக்கு திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உட்பட ஏராளமான திமுக முன்னணியினர் வந்து சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்..!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கே.பி.பி. சாமியின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார். அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சாமி, மீனவ சமுதாய மக்களுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்று கூறினார். அவரது மறைவு குடும்பத்திற்கும் திமுகவுக்கும் மட்டுமில்லாது ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

click me!