குடும்ப பஞ்சாயத்தை தீர்க்கவே ஸ்டாலினுக்கு நேரம் பத்தல.. திமுகவில் அதிருப்தி.. பற்றவைக்கும் ஜெயக்குமார்.

Published : Dec 29, 2021, 04:53 PM IST
குடும்ப பஞ்சாயத்தை தீர்க்கவே ஸ்டாலினுக்கு நேரம் பத்தல.. திமுகவில் அதிருப்தி.. பற்றவைக்கும் ஜெயக்குமார்.

சுருக்கம்

அரசு மெத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவு தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

அரசு மெத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவு தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கொடுத்த தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல், எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும் அதிமுக மீது ஏதேனும் புகார் வராதா என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு வந்தால் அதனை பெரிய அளவில் மக்களிடத்தில் பெரிதாக கொண்டு சேர்த்து வருவதாக கூறிய அவர், ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வரும்போது, அதற்குள்ளாக லுக் அவுட் நோட்டீஸ் போட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வரும் ஒரு நபரை பிடித்து, அவர் மூலமாக மீண்டும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்க வைத்துள்ளதாக கூறிய ஜெயக்குமார், எத்தனையோ குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, ராஜேந்திர பாலாஜிக்கு தனிப்படை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும், ராஜேந்திர பாலாஜியை தேச துரோகி போன்று திமுக சித்தரிக்கிறது, காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

அதேபோல் திமுக எடுத்து வரும் நடவடிக்கைக்கு எல்லாம் மீண்டும் அவர்கள் பதில் கூற வேண்டிய காலம் வரும் என்று கூறிய ஜெயக்குமார், காலம் மாறி நாங்கள் காவல்துறையை இயக்கும் காலம் வரும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்துமா என்பதில் சந்தேகம் தான் என்று கூறிய ஜெயக்குமார், அரசு மெத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவு தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி 1989ல் ஆட்சியை கலைத்தது போல் மீண்டும் அதுபோன்று நடந்துவிட கூடாது என்று திமுகவிற்கு அச்சம் உள்ளது. மறைமுகமாக ஆதரவு அளித்து, இரட்டை வேடத்தை திமுக செய்து வருவதாகவும், தேர்தல் சட்ட திருத்த மசோதவிற்கு ராஜ்யசபாவில் எதிர்த்து வாக்களிக்காமல் ஆதரவு அளித்துவிட்டு, லோக்சபாவில் எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற நாடகத்தை திமுக செய்வதாக ஜெயக்குமார் குறை கூறினார். திராவிடன் பார்ட்டியாக இருந்த திமுக, பேமிலி பார்ட்டியாக மாறி உள்ளது என்றும், திமுகவில் முன்னாள் தலைவர்கள் எல்லோரும் அதிருப்தியில் உள்ளதாகவும், குடும்ப சண்டையை தீர்ப்பதிலேயே ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மக்களை காப்பாற்றுவதில் அவர் ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!