எனக்கு 3, 4 புருஷனா.. அசிங்க படுத்தாதீங்க.. தப்பான எண்ணத்துல வராதீங்க.. அருள்வாக்கு அன்னபூரணி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2021, 4:23 PM IST
Highlights

ஆனால் எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்றெல்லாம் பேசுகிறார்கள். அதை எல்லாம் சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்ய வருகிற குழந்தைகளுடன் என்னை தொடர்புபடுத்தி கொச்சைப் படுத்துகின்றனர். யாருடனும் போட்டி போட்டுக்கொண்டு பிஸ்னஸ் செய்வதற்காக நான் வரவில்லை. ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மிகம் என்பது தவறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தத்தான் வந்திருக்கிறேன். 

இனி நான் ஆதிபராசக்தி அல்ல, என்னை யாரும் இனி அப்படி அழைக்க வேண்டாம், வெறும் அம்மா என்று அழைத்தாலே போதும் என அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் பேசு பொருளாகி உள்ள பெயர் அன்னபூரணி அரசு அம்மா. தன்னை ஆதிபராசக்தி என்றும் கூறி தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார் இவர். இறந்த கள்ளக்காதலனின் ஆவி தனக்குள் புகுந்துள்ளதாகவும் அதனால் அனைவருக்கும் அருள்வாக்கு சொல்லி வருவதாகவும், தனக்குள் அபரிதமான சக்தி மறைந்திருப்பதாகவும் பகீர் கிளப்பி வருகிறார் அன்னபூரணி அம்மா. செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி, தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் அறிவித்துள்ளார்.யார் இந்த திடீர் சாமியார் அன்னபூரணி என பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது எதிர்வீட்டில் வசித்த லட்சுமி என்ற பெண்ணிக் கணவர் அரசு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்துக்கு வந்தவர்தான் அன்னபூர்ணி.

கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை பரிதவிக்க விட்டு எதிர் வீட்டுகாரருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அன்னபூரணி. சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீ செய்வது தவறு, இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பில் இருப்பது தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அன்னபூர்ணிக்கு எவ்வளவோ படித்து படித்து சொல்லியும், முடியவே முடியாது வாழ்ந்தால் அரசுவுடன்தான் வாழ்வேன் என அடுத்தவரின் கணவனை ஆட்டயப்போட்டவர்தான் இந்த அன்னபூர்ணி. இப்படிப்பட்ட அன்னபூரணி திடீரென அம்மனாக அவதாரம் எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருவது போன்ற வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சொல்வதெல்லாம் பஞ்சாயத்தை அறிந்த பலரும், இது போன்ற போலி சாமியார்களை உடனே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் எதிரொலியாக அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் பலரும் அன்னபூரணியை கைது செய்ய வேண்டுமென சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில்தான் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அன்னபூரணி, அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னைப் பற்றியெல்லாம் ஊடகங்களும் தவறாக வதந்திகளை பரப்பி வருகின்றன. ஆளாளுக்கு பேட்டி கேட்டு என்னைத் தொந்தரவு செய்கின்றனர், நான் ஆன்மீக வாழ்க்கையில் நுழைந்த உடன் என்னை உணர்ந்து கொண்டவர்கள் என்னை ஆதிபராசக்தி என அழைத்து வருகின்றனர். அது ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான இடையேயான உணர்வு. அந்த அடிப்படையில் அவர்கள் என்னை அப்படி அழைக்கின்றனர். ஆனால் இப்போது அந்தப் பெயர் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. எனவே இனி நான் ஆதிபராசக்தி இல்லை. என் குழந்தைகள் உட்பட யாரும் என்னை அப்படி அழைக்க மாட்டார்கள். இந்த பெயரை வைத்துதான் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியல் எனக்கு இல்லை. என் குழந்தைகளுக்கு நான்தான் அம்மா என்று தெரியும். அது போதும், நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்காக வரவில்லை. 

ஆனால் எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்றெல்லாம் பேசுகிறார்கள். அதை எல்லாம் சொல்வதற்கே எனக்கு கூச்சமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்ய வருகிற குழந்தைகளுடன் என்னை தொடர்புபடுத்தி கொச்சைப் படுத்துகின்றனர். யாருடனும் போட்டி போட்டுக்கொண்டு பிஸ்னஸ் செய்வதற்காக நான் வரவில்லை. ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மிகம் என்பது தவறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தத்தான் வந்திருக்கிறேன். என்னைத் தேடி ஒரு அம்மாவாக, ஒரு தாயாக குழந்தைகளைபோல யார் வருகிறீர்களோ அவர்களை அரவணைக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த தவறான கண்ணோட்டத்துடனும் என்னை தேடி யாரும் வரவேண்டாம். எனவே இனி ஆதிபராசக்தி என்று என்னை அழைக்க வேண்டாம். அம்மா என்று அழைத்தாலே போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!