மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்பி ஸ்டாலின் கேவலமான அரசியல் செய்கிறார்.. வெளுத்து வாங்கிய முருகன்

By vinoth kumarFirst Published Sep 13, 2020, 5:36 PM IST
Highlights

எல்லா விஷயங்களிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். உச்சநீதமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். 

பாஜகவில் தங்களது கட்சியினர் இணைந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உளவு பார்த்து வருகின்றனர் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது. மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் தர வேண்டியது அரசும், எதிர்க்கட்சிகளும். மாணவர்களை தவறான வழியில் திசை திருப்பக் கூடாது. தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு பயம் எழுகிறது. அந்த தேர்வு பயத்தை போக்க வேண்டியது பெற்றோர்களும் அரசியல்வாதிகளும். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மாணவர்களை பயமுறுத்த அரசியல் செய்யக்கூடாது.

மேலும்,பேசிய அவர் எல்லா விஷயங்களிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். உச்சநீதமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக, பாஜக உறவு சுமூகமாக உள்ளது. ஹிந்தி தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களும் ஒரு மொழியை கற்க வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு. மும்மொழிக் கொள்கை எங்கள் நிலைப்பாடு.  2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதியில் பாஜக வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. தற்போது பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் அலை அலையாய் வந்து கொண்டுள்ளனர். 

எனவே நாங்கள் தனித்து நின்றாலும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இப்போதைக்கு இதே கூட்டணி தொடரும். பாஜகவினர் தங்களது கட்சியினரை இணைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன.  2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் செல்வது நிச்சம் என எல்முருகன் தெரிவித்துள்ளார். 

click me!