ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் புளுகு மூட்டையை அள்ளி விடும் ஸ்டாலின்... விளாசி தள்ளிய அண்ணாமலை..!

By vinoth kumarFirst Published Sep 13, 2020, 5:12 PM IST
Highlights

நீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத்துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகியோர் ஒரேநாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில், நீட்தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான அண்ணாமலை;- நீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

இந்த நீட் தேர்வு நடந்த பிறகு உட்காந்து பேசலாம். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்கு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். கல்வி வணிகமாக மாறியதை உடைக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது என தெரிவித்துள்ளார். 

click me!