ஸ்டாலின் நிறம் மாறக்கூடியவர், சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து இல்லை..அதிரடி அமைச்சர் செல்லூர் ராஜீ

By T BalamurukanFirst Published Jun 14, 2020, 7:01 PM IST
Highlights

திமுகவுக்கு நிரந்தர கொள்கை கிடையாது. ராகுல் பிரதமராவார் எனக்கூறி, கடைசியில் காங்கிரஸ் தோற்றது தான் மிச்சம். பிரதமர் வீட்டிற்கு வருகிறார் என்றவுடன் வெளிநாடு சென்ற முக. ஸ்டாலின் பிரதமரை வரவேற்க ஓடோடி வந்தார். பின்னாளில் அவரை மிக மோசமாக விமர்சித்தார். முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மீது ஆர்எஸ். பாரதி வழக்கு போட்டுள்ளார்.


மதுரை அனுப்பானடி பகுதியில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு  இலவச அரிசி, காய்கறி, பலசரக்கு,சத்து மாத்திரைகள்,கப சுர குடிநீர்  ஆகியவற்றை  அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

அதன் பிறகு  செய்தியாளர்களர்களை சந்தித்தார்..அப்போது பேசியவர்...
"திமுக போல ஒன்றிணைவோம் வா" என, மக்களிடம் தொழிலதிபர்களிடம் வசூல் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை.எதிர்க்கட்சித் தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனையை சொல்ல வேண்டும். மக்களுக்கு அறிவுரை சொல்லலாம். அவர்  முதல்வர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்.  முதல்வர் தான் எல்லா துறைகளுக்கும் தலைமை. அவர் அனுமதி இன்றி எந்த துறையிலும் அணுவும் அசையாது.

பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கருத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து இருப்பது திமுக  நிறம் மாறக்கூடிய கட்சி என்பதை காட்டுகிறது. திமுகவுக்கு நிரந்தர கொள்கை கிடையாது. ராகுல் பிரதமராவார் எனக்கூறி, கடைசியில் காங்கிரஸ் தோற்றது தான் மிச்சம். பிரதமர் வீட்டிற்கு வருகிறார் என்றவுடன் வெளிநாடு சென்ற முக. ஸ்டாலின் பிரதமரை வரவேற்க ஓடோடி வந்தார். பின்னாளில் அவரை மிக மோசமாக விமர்சித்தார். முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மீது ஆர்எஸ். பாரதி வழக்கு போட்டுள்ளார். இது தவிர, திமுக எவ்வித ஆக்கப்பூர்வ பணிகளை செய்வதில்லை. வழக்குப் போட்டால் பத்திரிக்கையில் வரும் என, வழக்கு போடுகிறார்கள். 

அதிமுக எம்எல்ஏவுக்கும் கரோனா தொற்று வந்துள்ள நிலையில், அனைவரும் பாதுகாப்பாக கவனமோடு இருக்கவேண்டும். முகக் கவசம் அணியவேண்டும். சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் நிகழும் என  அமமுகவினர் கூறுவது அவர்களின் நம்பிக்கையை காட்டுகிறது. அடுத்த வேலையை நோக்கி அதிமுக சென்று கொண்டுள்ளோம். தற்போதைக்கு மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என உழைத்து கொண்டுள் ளோம், என்றார்.
 

click me!