வீராவேசமாக டெல்லிக்கு சென்று காற்று போன பலூனாக திரும்பிய எடப்பாடி பழனிசாமி..! கலாய்க்கும் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published May 2, 2023, 9:19 AM IST

கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் அது உறுதியென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


உங்களில் ஒருவன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வீடியோவை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முக்கிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம்..
 
கேள்வி : கூட்டணிக் கட்சிகள். எதிர்க்கட்சியினர், செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை நிறுத்தி வைத்தீர்கள். இது உங்கள் ஜனநாயகப் போக்கையும் முதிர்ச்சியையும் காட்டுகிறது ஆனால் இதை பலவீனமாக ஒருதரப்பினர் கட்டமைக்க முயல்கிறார்களே?

Latest Videos

பதில்:  "மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களின் மனச்சாட்சியே நீதிபதி”-என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி! அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவுமில்ல.  பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.

நினைவு பரிசு வழங்கியது ஏன்.?

கேள்வி: அண்மையில் விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கள ஆய்வுக்காக சென்றிருந்தீர்கள். அங்கு சிறப்பான முறையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கியிருந்தீர்கள். அதில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அரசுசாரா சமூகநல ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசு கொடுத்திருந்தீர்கள். இந்த நினைவுப் பரிசு வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன?

பதில்:  பாராட்டு என்பது தங்களுடைய பணியைக் கடமையாக செய்யாமல் மக்களுக்கான சேவையாக செய்கிறவர்களுக்கு காட்டுகின்ற நன்றி மட்டுமல்ல, இசை பார்த்து இன்னும் நிறைய பேர் இவ்வாறு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று ஊக்கப்படுத்தவும் தான். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் மக்களுடைய தேவைகள் அத்தனையையும் அரசு மட்டுமே செய்துவிட முடியாது. அரசு சாரா சமூகநல ஊழியர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம். எனவேதான் இவ்வாறு சேவை மனப்பான்மை கொண்ட அரசுப் பணியாளர்கள், அரசுசாரா நிறுவன ஊழியர்களை வெளிப்படையாக அழைத்துப் பாராட்டுகிறோம்!

முன்னாள் அமைச்சர் மீதான் ஊழல் புகார்

கேள்வி: கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?

பதில்: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அடிப்படையில், இந்த செல்ல முன் சில திருத்தங்களின்  அடிப்படையில் இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லு சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது.  அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து  கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் அது உறுதி  ! 

டெல்லியில் நடந்தது என்ன.?

கேள்வி:டெல்லிக்குப் சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது?

பதில்: விராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே என தெரிவித்துள்ளார். 

click me!