ஸ்டாலினுக்கு என்னுடன் விவாதம் செய்ய சரக்கு இல்லை... மீண்டும் வம்புக்கு இழுத்த முதல்வர் எடப்பாடி..!

Published : Mar 30, 2021, 11:29 AM IST
ஸ்டாலினுக்கு என்னுடன் விவாதம் செய்ய சரக்கு இல்லை... மீண்டும் வம்புக்கு இழுத்த முதல்வர் எடப்பாடி..!

சுருக்கம்

தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை மீண்டும் தனி விவாதத்திற்கு அழைத்துள்ளார். சரக்கு இல்லாததால் விவாதத்திற்கு வர பயப்படுகிறார் என்றும் முதலமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.

தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை மீண்டும் தனி விவாதத்திற்கு அழைத்துள்ளார். சரக்கு இல்லாததால் விவாதத்திற்கு வர பயப்படுகிறார் என்றும் முதலமைச்சர் கிண்டல் செய்துள்ளார். 

தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது துண்டு சீட்டு இல்லாமல் தனியாக மக்கள் மத்தியில் மேடை போட்டு தனி விவாதத்திற்கு வருமாரு சவால் விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற மொக்கையான பதில்களை கூறி வந்தார். இதையடுத்து, இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் தனியாக வந்தால் பதிலளிக்க தயார் என்றும் விவாதத்திற்கு வர வேண்டும் என்று மீண்டும் சவால் விடுத்தார். 

இதற்கும் சாக்கு சொல்லி தப்பித்துவிட்டார் ஸ்டாலின். இதற்கு நெட்டிசன்கள் பயந்து ஒடும் ஸ்டாலின், துண்டு சீட்டு ஸ்டாலின் என்று சமூக வலைதளங்களில் ஸ்டாலினை கிண்டலடித்தனர். இதையடுத்து, சென்னையில் தனது 4வது கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று மீண்டும் சவால் விடுத்தார். தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் தற்போதாவது ஸ்டாலின் தன் சவாலை ஏற்று விவாதத்திற்கு வருவார் என்று முதலமைச்சர் அழைத்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள்  தெரிவித்தனர். பயந்து ஒடும் ஸ்டாலினை “விடாது கருப்பாக” சவாலுக்கு முதலமைச்சர் அழைக்கிறார் என்றும், “கண்டா வரச் சொல்லுங்க” என்று ஸ்டாலினை முதலமைச்சர் கூப்பிடுகிறார் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!