அப்பாவி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு... திமுகவை வெளுத்து வாங்கும் வேலுமணி..!

Published : Jun 06, 2021, 11:12 AM IST
அப்பாவி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு... திமுகவை வெளுத்து வாங்கும் வேலுமணி..!

சுருக்கம்

ரேஷன் கடைகளிலும், தடுப்பூசி போடும் இடங்களிலு திமுகவினர் டோக்கன் கொடுத்து குளறுபடி செய்வதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என  முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.

ரேஷன் கடைகளிலும், தடுப்பூசி போடும் இடங்களிலு திமுகவினர் டோக்கன் கொடுத்து குளறுபடி செய்வதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என  முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில் நேற்று இலவச உணவு வழங்கும் பணியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தொகுதிக்குள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக,  4 வாகனங்களையும் வழியனுப்பி வைத்தார். தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிருமி நாசினி தெளிக்கும் வாகனத்தை போலீசார்  தடுத்து நிறுத்தினர். இதனால், அரசு அதிகாரிகளுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி;- கிருமி நாசினி தெளிக்கும் வேலையை, உள்ளாட்சி அமைப்பினர் செய்வது இல்லை. ஒரு மாதமாக தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தியும் செய்யவில்லை. எனவே நாங்கள் செய்ய ஆரம்பித்தோம். அதை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த கொரோனா காலத்தில், மக்கள் நலன் கருதி எந்த பணியை செய்வதற்கும் எங்களுக்கு அனுமதி தருவதில்லை. அரசு தரப்பிலும் அதை செய்வதில்லை. 

மேலும், ரேஷன் கடைகளிலும், தடுப்பூசி போடும் இடங்களிலு திமுகவினர் டோக்கன் கொடுத்து குளறுபடி செய்வதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நிறைய தவறு நடக்கிறது. கொரோனாவால் இறந்தவர்களுக்கு, இழப்பீடு தர வேண்டுமே என்பதற்காக, நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர் என்றார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்