கனிமொழிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின் - தானே போய் சந்தித்தார்

First Published Jan 6, 2017, 8:15 PM IST
Highlights



திமுக மகளிர் அணி நிர்வாகியும் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழியின் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததால் இரவு தானே நேரில் சென்று வாழ்த்தை பெற்றார். 

திமுகவில் நடக்கும் உட்கட்சி முட்டல் மோதல்கள் வெளியே தெரியதவண்ணம் அழகாக அதற்கு வர்ணம் பூசப்படுகிறது. அப்படி ஒரு வர்ணம் தான் நேற்று வாட்ஸ் அப் , வலைதளங்களில் கனிமொழி ஸ்டாலின் வீட்டில் அவரிடம் ஆசி பெறுவது , அருகில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நிற்கும் படம் வெளியானது. 

மேலாக பார்த்தால் ஏதோ ஒற்றுமையாக சகோதர சகோதரி பாசத்தால் வாழ்த்து சொல்லி ,பெற்று எடுக்கப்பட்டது போன்ற தோற்றம் வரும் .
 உண்மை என்ன நேற்று கனிமொழிக்கு பிறந்த நாள். கடந்த ஆண்டு இதே நாள் அவரது இல்லத்தில் தான் எவ்வளவு கூட்டம். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முந்தய நேரம் கனிமொழியால் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என பெரும் படையே அவர் வீட்டு முன்னர் குவிந்தது.

 இந்த ஆண்டு தந்து பிறந்த நாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என கனிமொழி கேட்டு கொண்டாலும் அவரது வீட்டுக்கு வாழ்த்து சொல்லக்கூடாவா வரமாட்டார்கள். ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது. 

இது பற்றி கேட்டபோது என்ன சார் சொல்றது எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது. கட்சியே அவர் (ஸ்டாலின்) கையில் போய் விட்டது. இப்ப இங்க யார் வந்து பகையை சம்பாதிக்க விரும்புவார்கள் என்று கூறினர். 

சமீபகாலமாக அழகிரி மட்டுமல்ல கனிமொழியும் அதிகமாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார் எனபதன் எடுத்து காட்டே நேற்றைய சம்பவம். கனிமொழி போராட்டத்தில் கலந்துகொண்டால் அது செய்தியாக வரக்கூடாது , அவருக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள தடை , முன்னணி பேச்சாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டாலும் மூன்று தொகுதி இடை தேர்தலில் கடைசிவரை பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு.

கட்சியில் மகளிர் அணி என்ற கிளை பொறுப்பில் மட்டுமே இருக்கும் கனிமொழி சற்குண பாண்டியன் மறைவுக்கு பின்னர் காலியாக உள்ள துணை பொதுச்செயலாளர் இடத்தை எதிர்பார்த்தார். ஆனால் அது இல்லை என்றாகிவிட்டது. 


பொருளாளர் பதவியை எ.வ.வேலுவுக்கு தரவேண்டும் என்ற ஸ்டாலினின் விருப்பம் மறுக்கப்பட்டதால் எந்த பதவிக்கும் ஆட்களை போடாமல் கட்சி விதியை மீறி பொருளாளர் பதவியையும் தானே வைத்துகொண்டார் ஸ்டாலின். 

இதையெல்லாம் எதிர்க்க முடியாத நிலையில் மவுனமாக தனது சகோதரர் செயல்தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து சொன்னார் கனிமொழி. ஆனால் மறு நாள் ஸ்டாலின் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்தார் , கடைசிவரை சொல்லவில்லை . கடந்த ஆண்டு சிஐடி காலனி வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்து சொன்ன ஸ்டாலின் இந்த ஆண்டு கண்டு கொள்ளவே இல்லை. 

 

இதனால் இரவு கனிமொழியே ஸ்டாலின் வீட்டுக்கு நேரில் சென்று ஆசிபெற்றார். செயல் தலைவரானதற்கு  வாழ்த்தும் சொன்னார். 
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டாலும் அழகிரி போல் அல்லாமல் தனக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு, வெல்வோம் என கனி மொழி காத்திருப்பதாகவே தெரிகிறது.

click me!