
ஆர்கே நகர் இடைத் தேர்தல் குறித்து ராயபுரம் பகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, அவர் பேசியதாவது.
நான் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்தில் இருந்து, தொகுதி மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறேன். அதற்கான நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்து தீர்த்து வைக்கிறேன்.
ஆனால், அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் இதுவரை அவர்களது தொகுதிகளுக்கு சென்றதாவே தெரியவில்லை.
ஜெயலலிதா, மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போது, வாய் திறக்காமல் இருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது ஏன் அவரது மறைவில் மர்மம் இருக்கிறது என புகார் கூறுகிறார்.
அதிமுகவில் உள்ள இரு அணிகளுமே பதவிக்காகவே, தற்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பதவி ஆசையும், ஆட்சி அதிகாரமும் தேவை. அதற்காகவே, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
தற்போது அதிமுகவை வழி நடத்த யாரும் இல்லாமல், அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களையும் குழப்பி வருகிறார்.