வைராலாக பரவும் பணம் பட்டுவாடா வீடியோ - அதிர்ச்சியில் உறைந்த தினகரன் “TEAM”

 
Published : Apr 06, 2017, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
வைராலாக பரவும் பணம் பட்டுவாடா வீடியோ - அதிர்ச்சியில் உறைந்த தினகரன் “TEAM”

சுருக்கம்

Borne payment Video traumatized News TEAM

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அனைத்து கட்சியினரும், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக ஓபிஎஸ் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக, தேமுதிக உள்பட அனைத்து கட்சியினரும், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
பெரும்பாலும் கொலை மிரட்டல், பணம் பட்டுவாடா, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்வது உள்ளிட்டவை போன்ற புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து சிலரை கைது செய்துள்ளனர். அதில் வெள்ளி விளக்கு கொடுத்தது. பணம் கொடுத்தது என பிடிபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை சுமார் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருந்த சுமார் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், பணம் கொடுக்கும்போது செல்போன் மூலம் வீடியோ எடுத்து வைத்தனர். மேலும், அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் பரவிவிட்டனர்.
இதனால், ஆர்கே நகர் தொகுதி மட்டுமின்றி, இந்த வீடியோ காட்சி தமிழகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள், கைது பீதியில் உள்ளனர். மேலும், தினகரன் ஆதரவாளர்களான அமைச்சர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்