மோடிக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கல.. நாளை அவருக்கே இந்த பிரச்சனை வந்தால்.. எச்சரித்த குஷ்பு..

Published : Jan 07, 2022, 06:31 PM IST
மோடிக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கல.. நாளை அவருக்கே இந்த பிரச்சனை வந்தால்.. எச்சரித்த குஷ்பு..

சுருக்கம்

ஒரு அமைச்சர் சென்றாலே பாதுகாப்பு அதிக அளவில்  இருக்கும். இது பொய்யான சாக்கு. ஒரு பிரதமர் எந்த கட்சி சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். கட்சிக்கு அப்பாற்பட்டு தான் அவரை பார்க்க வேண்டும். தங்களுக்கு ஆட்சி கையில் வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி போக காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்பது தெரிகிறது.

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் திருப்பி அனுப்பப்பட்டதற்கோ அல்லது அவரின்  பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கோ இதுவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கண்டனமோ அறிக்கையோ தெரிவிக்கவில்லை என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் நாளைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்பட்டால் பாஜக குரல் கொடுக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். 

பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பஞ்சாப் மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வி.பி துரைசாமி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மேடையில் பேசிய பாஜக வின் செயற்குழு உறுப்பினர் குஷ்பூ 

பிரதமர் என்பவர் கட்சிக்கு அப்பாற்பட்டவர். அவர் தான் இந்த நாட்டின் நிறுவனம். இதுவரை  பல பிரதமர்களை பார்த்துள்ளோம். இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை. ஆனால் குறி வைத்து திட்டமிட்டு பிரதமர் மோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பஞ்சாப் முதல்வர் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. பஜகா நாடகம் ஆடுகிறது என்கிறார்கள். பிரதமர் உயர் விஷயத்தில் யாராவது நாடகம் ஆடுவார்களா. எந்த ஒரு பிரதமருக்கும் இந்த சூழல் ஏற்பட கூடாது. இதனால் தான் காங்கிரஸ் வேண்டாம், கழித்து விடுங்கள் என மஹாத்மா காந்தி கூறினார். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. என்றால் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் செல்லும்  வழி பற்றி தெரியவில்லை என அந்த மாநில முதலமைச்சர் கூறுகிறார். ஒரு அமைச்சர் சென்றாலே பாதுகாப்பு அதிக அளவில்  இருக்கும். இது பொய்யான சாக்கு.

ஒரு பிரதமர் எந்த கட்சி சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். கட்சிக்கு அப்பாற்பட்டு தான் அவரை பார்க்க வேண்டும். தங்களுக்கு ஆட்சி கையில் வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி போக காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்பது தெரிகிறது. இதற்கு சோனியா காந்தி நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். பஞ்சாப் முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும். கொரானா பரவல் காரணமாக பிரதமர் தமிழகம் வரவில்லை. தமிழக முதலமைச்சர் இதற்கு கண்டன  அறிக்கை விடவில்லை. அனைத்து மாநில முதலமைச்சர்கள் பேசியுள்ளார்கள். ஆனால் ஸ்டாலின் ஒரு அறிக்கை கூட விடவில்லை . நாளை ஸ்டாலினுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் குரல் கொடுப்போம்.


 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!