மோடி 7 ஆண்டுகளில் செய்ய முடியாததை 100 நாட்களில் செய்து காட்டிய ஸ்டாலின்.. பாஜகவை வெறுப்பேற்றும் அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 3:26 PM IST
Highlights

இந்தியாவில் ஜனநாயகத்தையும், சோஷலிசத்தை கொண்டுவந்தவர் நேரு. ஆனால் தற்போது  அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மோடி தனியாருக்கு விற்பனை செய்து வருகிறார். 

ஏழு ஆண்டுகளில் மோடி செய்ய முடியாத ஒன்றை தமிழகத்தில் 100 நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார் என்றும், பெட்ரோல் விலை 3 ரூபாய்  முதல்வர் குறைத்துள்ளார் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ் அழகிரி தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். அதில், காங்கிரஸ் முன்னாள் பிரதமர் நேரு இந்தியா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். அதில் பல லட்சம் கோடி வருமானம்நாட்டுக்கு கிடைத்தது. 

இந்தியாவில் ஜனநாயகத்தையும், சோஷலிசத்தை கொண்டுவந்தவர் நேரு. ஆனால் தற்போது  அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மோடி தனியாருக்கு விற்பனை செய்து வருகிறார். நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரும் ரயில்வே நிறுவனம், காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் மோடி அரசு விற்பனைசெய்து வருகிறது. விரைவில் மக்களுக்கு விரோதமாக பாஜக கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக சட்டமன்றத்தில் புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவரை மனதார பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் சிறப்பு என்னவென்றால், 7 ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை தமிழகத்தில் வெறும் 100 நாட்களில் ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார். அவர் பெட்ரோலின் விலை 3 ரூபாய் குறைத்துள்ளார். தேங்காய் எண்ணெய் என்பது பெண்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ணெய், அதற்கு 18 சதவீதம் வரி விதித்திருப்பது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும், திமுக அரசு நீட் விவகாரத்தில் தெளிவாக உள்ளது, நீட் விவகாரத்தில் ஓய்வு பெற்றநீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது, நமது கருத்துக்களை தீர்மானம் மூலமாக மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது. நீதிமன்றம் சென்றிருக்கிறோம், மத்திய அரசு இதனை பரிசீலிக்கவில்லை என்றால் தமிழகத்தில் வேறு நிலைமையை எடுப்போம் என அவர் எச்சரித்தார்.
 

click me!