நீலகிரியில் ராசா! சிதம்பரத்தில் திருமா! திருச்சியில் வைகோ! : அ.தி.மு.க. கூட்டணியை முடிவு பண்ணல, ஆனால் தளபதி வேட்பாளரையே ரெடி பண்ணிட்டாராம்.

By vinoth kumarFirst Published Jan 26, 2019, 7:19 PM IST
Highlights

ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் கூட்டணி பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளவே செய்யாது அ.தி.மு.க. கொஞ்சம் லேட்டா வந்தாலும் செம்ம கெத்தாக தேர்தலை சந்திப்பார் ஜெ., ஆனால் அவர் இல்லாத அ.தி.மு.க. எல்லாவற்றிலும் தள்ளாடுவது போல் இதோ கூட்டணியிலும் குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டிருக்கிறது. 

ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் கூட்டணி பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளவே செய்யாது அ.தி.மு.க. கொஞ்சம் லேட்டா வந்தாலும் செம்ம கெத்தாக தேர்தலை சந்திப்பார் ஜெ., ஆனால் அவர் இல்லாத அ.தி.மு.க. எல்லாவற்றிலும் தள்ளாடுவது போல் இதோ கூட்டணியிலும் குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆம் எந்த முடிவுக்கு வரமுடியாமலும், பி.ஜே.பி.யை விலக்கவும் முடியாமல் சேர்க்கவும் முடியாமல் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், நமது ஏஸியா நெட் தமிழ் இணையதளம் சுட்டிக் காட்டியது போல் ஸ்டாலின் தனது கூட்டணியை முடிவு செய்து விட்டதோடு எத்தனை இடங்கள் யார் யாருக்கு, அதில் யார் யார் எங்கேயெங்கே நிற்கிறார்கள் என்பது வரை முடிவு பண்ணிவிட்டாராம். இப்போதைக்கு தி.மு.க. கூட்டணியின் வி.ஐ.பி. தொகுதி வேட்பாளர்களுக்கு மட்டும் அவர்களின் தொகுதி கன்ஃபர்ம் ஆகியிருக்கிறது என்கிறார்கள். 

அந்த வகையில் மாஜி மத்தியமைச்சரான ஆ.ராசாவை மீண்டும் நீலகிரி தனி தொகுதியிலேயே போட்டியிட வைக்கப் போகிறார். இது ராசாவுக்கும் உறுதிப்படுத்தபட்டுவிட அவர் அங்கே அடிப்படை தேர்தல் பணிகளை துவக்கிவிட்டதோடு, இணையதளத்தில் தனக்கென பிரத்யேக பக்கங்கள் துவங்கி அடிச்சு நொறுக்க துவங்கிவிட்டாராம்.

அதேபோல் தன் கூட்டணியிலுள்ள ம.தி.மு.க. மற்றும் வி.சி.க. இரண்டுக்கும் இவ்வளவுதான் தொகுதிகள் என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். அந்த வகையில் வைகோ இந்த முறை நிச்சயம் எம்.பி.யாகி நாடாளுமன்றம் செல்ல ஆசைப்படுகிறாராம். டெல்லியில் தனது செல்வாக்கு சரிந்து கிடப்பதை அதிகாரப்பூர்வமாக மீட்டெடுக்க நினைக்கும் அவர் வழக்கம்போல் விருது நகரில் நிற்காமல் திருச்சியை தேர்வு செய்துள்ளாராம். ஸ்டாலினும் ஓ.கே. சொல்லிவிட, திருச்சி தி.மு.க. புள்ளியான நேருவோ ‘டபுள் ஓ.கே.ண்ணே, நான் முழு சப்போர்ட் பண்றேன்!’ என்று புரட்சிப் புயலை கண்கள் பனிக்க வைத்துள்ளாராம். 

சிதம்பரம் தனித் தொகுதி திருமாவளவனுக்கு செல்கிறது என்பதும் உறுதியாகி இருக்கிறது. இரு தலைவர்களும் ஹேப்பிதானாம் இதில். திருச்சியில் சமீபத்தில் நடந்த வி.சி.க. மாநாட்டின் ரிலாக்ஸ்ட் வேளையில் இது உறுதியானதாக தகவல்.

 இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த ம.தி.மு.க.வும், வி.சி.க.வும்தான் தங்கள் கூட்டணியில் இல்லை, அவர்கள் எங்கள் நண்பர்களே என்று சமீபத்தில் துரைமுருகன் அலறவிட்டிருந்தார்.  எல்லாம் அரசியல் தான்யா!

click me!