தொகுதி ஒதுக்கீட்டில் அசால்ட் பண்ணிய ஸ்டாலின்! இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கெத்து காட்ட முடிவு!

By Selva KathirFirst Published Mar 9, 2019, 9:38 AM IST
Highlights

கடந்த தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ஸ்டாலின் நிறைவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ஸ்டாலின் நிறைவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி எண்ணிக்கை குறித்து பேசும் போதே யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என்பதையும் கிட்டத்தட்ட ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதற்கு அந்த கட்சிகளும் ஓ.கே சொல்லிவிட்டன. அதன்படி காங்கிரஸ் கேட்கும் ஒரு தொகுதியை மதிமுகவும், திமுக போட்டியிட விரும்பும் ஒரு தொகுதியை விசிகவும் கேட்டன. ஆனால் அதனை எல்லாம் பேசி தற்போது முடித்தாகிவிட்டது. இதே போல் காங்கிரஸ் கட்சி விரும்பிய தொகுதிகளில் .90 சதவீதத்தை கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

இடதுசாரிக் கட்சிகளும் தங்களுக்க உரிய தொகுதிகள் என்று கொடுத்த பட்டியலில் பெரிய அளவில் திமுகவின் தொகுதிகள் இல்லை. மற்ற கட்சிகளும் திமுக சின்னத்தில் தான் போட்டி என்பதால் அவர்கள் கேட்கும் தொகுதியை ஒதுக்குவதிலும் பிரச்சனை இல்லை. கூட்டணி உடன்பாட்டை முதலில் அதிமுக அறிவித்தாலும், அதனை முதலில் இறுதி செய்தது திமுக தான். மேலும் பெரிய அளவில் எந்த இழுபறியும் இல்லாமல் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை தொடர்ந்து தொகுதிகளை அடையாளும் காணும் பணியையும கச்சிதமாக முடித்துள்ளார் ஸ்டாலின். இதனை தொடர்ந்தே நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓரிரு நாளில திமுக வேட்பாளர் பட்டியலே வெளியிட்டுவிடும் என்று கூறியுள்ளார். இது குறித்து விசாரித்த போது திமுகவின் 20 தொகுதிகள் மட்டும் அல்லாமல் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஸ்டாலின் இறுதி செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

சுமார் பத்து தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்டவர்களும், திமுக பிரபலங்களின் வாரிசுகளும் களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இது தவிர பத்து தொகுதிகளில் புதிய வேட்பாளர்களை களம்இறக்க ஸ்டாலின் முடிவு செய்து அதற்கு ஏற்ப வேட்பாளர்களை டிக் செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். வேட்பாளர்களின் பின்னணி, சொத்து விவரம், செலவு செய்யும் தன்மை உள்ளிட்டவை தான் அவர்களை இறுதி செய்ய உதவியதாக கூறுகிறார்கள்.

நடைபெற்று வரும் நேர்காணல் எல்லாம் வெறும் கண்துடைப்பு என்று பலருக்கு தெரிந்துள்ளது. இதனால் நேர்காணலுக்கு வருவதற்கு பெரிய அளவில் பலருக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சிலர் மட்டும் அதிர்ஷ்டத்தை நம்பி நேர் காணலுக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள். இருந்தாலும் நேர்காணல் முடிந்த மாலை அல்லது மறுநாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்கிறார்கள். அடுத்த நாளே ஸ்டாலின் பிரச்சாரத்தையும் துவங்குகிறாராம்.

 

click me!