
பான், குட்கா விவகாரத்தில் அமைச்சர் , போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கேட்டு, சட்டமன்றத்தில் திமுக நடத்திய விவாதத்தை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பதிலளித்தார். அவர் பதிலில் திருப்தியில்லை என்று திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது.
பான், குட்கா விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் திருப்தி இல்லாததால் வெளிநடப்பு செய்தோம். இந்த விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை , சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் ஜார்ஜ் ,டி.கே.ராஜேந்திரன் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினோம். அதற்கு, முதலமைச்சர் பழனிசாமி முறையாக பதில் அளிக்கவில்லை.
சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று அப்போதைய கமிஷனர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் பதிலளித்ததையும் அதை நீதிமன்றம் ஏற்றதையும் எடப்பாடி சுட்டி காட்டுகிறார். பான் குட்கா விவகாரத்தில் 22 ஆம் தேதி ஜார்ஜ் தலைமை செயலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பான் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்று.
ஜார்ஜ் ஏன் இந்த கடிதத்தை எழுதுகிறார். 22 ஆம் தேதி கடிதம் எழுதுவதற்கு ஒரு நாள் முன்பு தலைமை செயலர் வீட்டில் ரெய்டு நடந்தது. இதற்கு மறுநாள் தான் இந்த கடிதத்தை எழுதுகிறார்.
ஏற்கனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை உயர் அதிகாரி கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் தலைமை செயலர் ராம் மோகன் ராவுக்கு கடிதம் கொடுத்த பின்னரும் நடவடிக்கை இல்லை.
அதன் பின்னர் ரெய்டு நடக்கிறது.அதில் ஒரு டயரி சிக்குகிறது. அதன் பின்னர் தான் இவர் கடிதம் எழுதுகிறார். குற்றவாளி பெயர் பட்டியலில் உள்ள ஒரு காவல் அதிகாரியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதுவதா? இவரே குற்றவாளி யாரு ஜார்ஜ் , அவர் போய் கடிதம் எழுதுகிறார் . இதெல்லாம் நாடகம் என்று தெரிவித்தார்.