இஸ்லாமியர்கள் விடுதலைக்கு வேட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின்.. திமுகவின் முகத்திரையை கிழிக்கும் டிடிவி. தினகரன்.!

By vinoth kumarFirst Published Nov 25, 2021, 6:31 AM IST
Highlights

தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
எழுவர் விடுதலை கோரும் வழக்கில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதே குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் தான். அதேபோல் கோவை குண்டு வெடிப்பில் கைதாகி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ய கோரிக்கை வைக்கின்றனர். புதிய அரசாணையின்படி இவர் விடுதலையாகவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்.

தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இதேபோல தாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க, (3/4)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இதேபோல தாங்கள்தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா? என டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!