
சாதாரண குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50 லிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வரும் நவம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளின் முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.