வேட்பாளர் பட்டியல்..! கடைசி நேரத்தில் மனம் மாறிய ஸ்டாலின்..! ஐ பேக்கை அதிர வைத்த மாவட்டச் செயலாளர்கள்..!

By Selva KathirFirst Published Mar 16, 2021, 11:11 AM IST
Highlights

ஐ பேக் நிர்வாகிகள் எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்தார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் சிலர் வீடியோ, ஆடியோ ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்க ஒரு நிமிடம் ஆடிப்போயிருந்தார் ஸ்டாலின் என்கிறார்கள்.

ஐ பேக் நிர்வாகிகள் எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்தார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் சிலர் வீடியோ, ஆடியோ ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்க ஒரு நிமிடம் ஆடிப்போயிருந்தார் ஸ்டாலின் என்கிறார்கள்.

திமுகவுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்ட உடன் ஐ பேக் கையில் எடுத்த வேலை வேட்பாளர் தேர்வு என்பது தான். இதற்காக முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கருத்து கணிப்புகளை எடுத்தனர். பிறகு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் என பில்டர் செய்தார்கள். அதன் பிறகு அந்த வேட்பாளர்களுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்காரக்ள் மத்தியில் உள்ள அறிமுகம் உள்ளிட்டவை குறித்து சர்வே செய்தார். இப்படி எல்லாம் சர்வே எடுத்து 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து கொடுத்தது ஐ பேக்.

வேட்பாளர் தேர்வுக்கு மட்டுமே சுமார் 10 மாதங்கள் வரை ஐ பேக் டீம் தனியாக உழைத்ததாக கூறுகிறார்கள். அதிலும் திமுகவில் புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஐ பேக் டீமின் வேட்பாளர் தேர்வு இருந்தது என்கிறார்கள். இந்த வேட்பாளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதமே மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களின் பெயர் மிஸ்ஸிங். இதே போல் கட்சியின் சீனியர்கள் என்று காட்டப்படுபவர்கள் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

திமுகவில் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் பலருக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது என்று உறுதியாக கூறியிருந்தது ஐ பேக். அத்தோடு மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க கூடாது என்றும் ஐ பேக் ஸ்டாலினிடம் கூறியிருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் கடந்த வாரம் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் அப்படியே ஐ பேக் கொடுத்த பட்டியலுக்கு நேர்மாறாக இருந்ததாக கூறுகிறார்கள். வழக்கம் போல் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் தொகுதிகளை பெற்று இருந்தனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கேட்ட ஆயிரம் விளக்கு தொகுதியே கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்து ஐ பேக் டீம் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டதாக சொல்கிறார்கள். இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த போது, கடந்த டிசம்பர் மாதம் முதலே தலைவர் வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டினார். அவருக்கு ஐ பேக் கொடுத்திருந்த பட்டியலை போலவே திமுக மாவட்டச் செயலாளர்களும் பட்டியல் கொடுத்திருந்தனர். தொகுதிக்கு மூன்று பேர் என ஐ பேக் கொடுத்ததை போலவே மாவட்டச் செயலாளர்களும் தொகுதிக்கு மூன்று பேர் பெயர்களை பரிந்துரை செய்திருந்தனர்.

ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் மாவட்டச செயலாளர்கள் கொடுத்த பெயர்களும் -? ஐ பேக் கொடுத்த பெயர்களும் ஒத்துப்போகவில்லை. இதனால் அந்த இரண்டு பட்டியல்களையும் அடிப்படையாக வைத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் துணையோடு மு.க.ஸ்டாலின் ஒரு பட்டியலை ரெடி செய்ததாக கூறுகிறார்கள். அந்த பட்டியல் தான் திமுகவின் வேட்பாளர் பட்டியலாக வெளியாகியுள்ளது. வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில் ஐ பேக் டீமை விட மாவட்டச் செயலாளர்களையே மு.க.ஸ்டாலின் மறுபடியும் நம்பியுள்ளார் என்கிறார்கள். அதனால் தான் ஐ பேக் கொடுத்த வேட்பாளர்பட்டியல் நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இதற்கு காரணம் மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவரிடம் கொடுத்த சில தகவல்கள் தான் என்கிறார்கள். ஐ பேக் டீமில் தலைமை சரியாக இருந்தாலும் அவர்களால் பணி அமர்த்தப்பட்ட சில நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வில் காசு பார்த்ததாக கூறுகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடம் எவ்வளவு நெருக்கம் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் அவர்களிடமே பேரம் பேசியதாக கூறுகிறார்கள். இதனை எல்லாம் மாவட்டச் செயலாளர்கள்வீடியோ, ஆடியோவாக தயார் செய்து சரியான நேரத்தில் ஸ்டாலினிடம் போட்டுக் கொடுக்க வேட்பாளர் தேர்வில் ஐ பேக் பரிந்துரை கடைசியில் குப்பையில் கிடாசப்பட்டதாக சொல்கிறார்கள்.

click me!