ஸ்டாலினை முதலமைச்சராக்குவதுதான்  என் லட்சியம் !! பொங்கித் தீர்த்த வைகோ!!

 
Published : Feb 14, 2018, 10:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஸ்டாலினை முதலமைச்சராக்குவதுதான்  என் லட்சியம் !! பொங்கித் தீர்த்த வைகோ!!

சுருக்கம்

stalin become CM of tamilnadu told vaiko

கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை  முதல்வராக்கும் முடிவோடு தற்போது பொதுக்கூட்டங்களில்  கலந்து கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. இதற்கு பொது மக்கள் மற்றும் பயணிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தின.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பேருந்து கட்டணத்தை  உயர்த்தியதை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட  தலைநகரங்களில்  கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

மதுரையில் நடைபெற்ற  கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக அரசு மக்கள் மத்தியில் தோல்வியடைந்து விட்டதாகவும், ஏழை மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதலமைச்சராக்கும்  முடிவோடு பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். எதிர்கட்சித் தலைவர் என அழைக்கப்படும்  ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர்  என அழைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என  வைகோ  பேசினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!