இன்னைக்குதான் முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு போட்டார்...! உடனே பத்திகிச்சு தீ..!

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 08:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இன்னைக்குதான் முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு போட்டார்...! உடனே பத்திகிச்சு தீ..!

சுருக்கம்

Today Chief Minister Edappadi ordered but fire in temple

கும்பக்கோணம் ஆதிகும்பேசுவரன் கோயிலில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்று ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும்.

பணிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் அதற்கான நிதித் தேவை குறித்து அறிக்கையினை தயார் செய்ய வேண்டும். 

அந்த அறிக்கையை புதிதாக நியமிக்கப்படும் குழுவிடம் அளிக்க வேண்டும். அந்த குழு அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுக்க வேண்டும். 

உடனடி பாதுகாப்பு கருதி, கோயில் வளாகத்திற்குள்ளும், கோயில் மதில்சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் அமைந்துள்ள புராதான சிற்பங்கள், கல்தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும்.  

தீ அணைப்பு உபகரணங்களான தீ அணைப்பான்கள், நீர்தும்பிகள், மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் ஆகியனவற்றை அவ்வப்பொழுது பரிசோதனை செய்து, எந்த நேரத்திலும் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். 

இந்நிலையில், கும்பக்கோணம் ஆதிகும்பேசுவரன் கோயிலில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!
கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!