மோடிக்கு அம்பானி, அதானி !! ஸ்டாலினுக்கு டாடாவா ?

Published : Jan 25, 2019, 09:17 PM IST
மோடிக்கு அம்பானி, அதானி !! ஸ்டாலினுக்கு  டாடாவா ?

சுருக்கம்

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலினை டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மரியாதை நிமித்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அக்கட்சித் தலைவர்களை தொழிலதிபர்கள் சந்தித்துப் பேசுவது வழக்கம். பின்னர் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிவிப்பார்கள்.

தற்போது மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைவர்களை அம்பானி மற்றும் அதானி போன்ற தொழிலதிபர்கள் சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் ரத்தன் டாடா அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!